தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோவின் மூத்த போராளியான அமரர் பொன்னுத்துரை குணராஜா (டெனா) அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவையொட்டி சாவகச்சேரி சரசா...
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோவின் மூத்த போராளியான அமரர் பொன்னுத்துரை குணராஜா (டெனா) அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவையொட்டி சாவகச்சேரி சரசாலை நாவலர் முன்பள்ளி சிறார்கள் 24 பேருக்கு விளையாட்டு உபகரணங்களும்
யாழ் கொட்டடி நமசிவாயம் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 20 வறிய நிலை மாணவர்களுக்கு ரூபா 500.00 படி இலங்கை வங்கியில் வைப்பிலிட்டு வங்கிப் புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வுகள் ரெலோ இயக்கத்தின் அரசியல் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் ( 22- 06 -2019) நடைபெற்றது.
மேற்குறித்த நிகழ்வுகளில் சாவகச்சேரி நகரசபையின் 8ம் வட்டார உறுப்பினர் கஜீதரன் அவர்களும். யாழ் மாநகரசபையின் கொட்டடி 25 ம் வட்டார உறுப்பினரான N தனேந்திரன் அவர்களும் முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றார்கள் பாடசாலை சமூகத்தினர் மற்றும் டெனாவின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.










