இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இன்று ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்திற்காக விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பல்வேறு தரப்பின...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இன்று ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்திற்காக விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பல்வேறு தரப்பினர்களுடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.
இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்திற்கு வந்த அவர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன் பின்னர் கோவில் வீதியில் உள்ள முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரனுடைய இல்லத்திற்கு சென்ற அவர் அவருடன் கலந்துரையாடியிருந்தார்.
இச் சந்திப்பினை முடித்துக் கொண்டு புறப்பட்ட அவர் யாழ்.இந்திய துணைத் தூதுவர் எஸ்.பாலச்சந்திரனையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.