ஆஸியிடம் போராடித் தோல்வியடைந்தது பங்களாதேஷ்

ஆஸியிடம் போராடித் தோல்வியடைந்தது பங்களாதேஷ்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் வோர்னர் சதம் விளாசி கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்று புள்ளிப் பட்ட...

பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் வோர்னர் சதம் விளாசி கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னெறியது. முஸ்பிகீர் ரகீம் சதமடித்தும் பங்களாதேஷ் அணி இறுதிவரை போராடி ஏமாற்றமடைந்தது.



இங்கிலாந்து மண்ணில் ஐ.சி.சி., உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நாட்டிங்காமில் இன்று நடந்த 26ஆவது லீக் போட்டியில் ‘நடப்பு சம்பியன்’ ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் ஷோன் மார்ஷ், பெஹ்ரன்டர்ப், ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டு காயத்திலிருந்து மீண்ட ஸ்டாய்னிஸ், ஜாம்பா, கூல்டர் நைல் வாய்ப்பு பெற்றனர். பங்களாதேஷ் அணியில் சைபுதின், மொசாதக்கிற்குப்பதில் சபிர் ரஹ்மான், ருபைல் ஹொசைன் இணைந்தனர்.



அபார ஆரம்பம்

ஆஸ்திரேலிய அணிக்கு தலைவர் பின்ச், வோர்னர் ஜோடி அபார ஆரம்பம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 121 ஓட்டங்கள் சேர்த்தபோது, பின்ச் 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எதிரணி பந்துவீச்சை சிதறடித்த வோர்னர், ஒரு நாள் அரங்கில் 16ஆவது சதம் அடித்தார். நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் இவர் அடித்த இரண்டாவது சதம். வோர்னர் 166 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.




கவாஜா 89 ஓட்டங்களை எடுத்து அரை சதம் கடந்தார். மக்ஸ்வெல் 32 ஓட்டங்களுடன் ரன் அவுட்டானார். ஸ்மித் (1) ஏமாற்றினார். ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 368 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது.

மீண்டும் ஆட்டம் போட்டியில் ஸ்டாய்னிஸ் விளாச, ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 381 ஓட்டங்கள் குவித்தது. ஸ்டாய்னிஸ் (17), கேரி (11) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.



பங்களாதேஷ் அணி சார்பாக சௌமியா சர்க்கர் 3 விக்கெட்டுக்களைச் சாய்த்தார்.




பதிலுக்கு 50 ஓவர்களில் 382 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு சௌமியா சர்க்கர் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்து தமிம் இக்பாலுடன் இணைந்த சகிப் அல் ஹசன் சிறப்பாக ஆடி ஓரளவு நம்பிக்கையளித்தார்.ஷ



கடந்த போட்டிகளில் சதம் விளாசி பங்களாதேஷ் அணிக்கு வலுச் சேர்த்த சகிப் அல் ஹசன் இந்தப் போட்டியில் 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அடுத்து வந்த முஸ்பிகீர் ரகீம் சிறப்பாக ஆட மறுமுனையில் தமிம் இக்பால் அரைச்சதம் கடந்தார். எனினும் தமிம் இக்பால் 62 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

லிப்டன் டாஸ் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து திரும்ப பங்களாதேஷ் அணி 29.2 ஓவர்களில் 175 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையிழந்தது. அடுத்து வந்த மகமடுல்லா அதிரடியாக ஆடி பங்களாதேஷ் அணி ஆறுதலடைந்தது. மறுமுனையில் அனுபவ வீரர் முஸ்பிகீர் ரகீம் அரைச்சதமடித்தார்.

இந்த ஜோடி அதிரடியாக 16.1 ஓவர்களில் 127 ஓட்டங்களைக் குவிக்க பங்களாதேஷ் அணி 300 ஓட்டங்களைக் கடந்தது. மகமடுல்லா 50 பந்துகளில் 69 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்வரிசைத் துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்காத போதும் முஸ்பிகீர் ரகீம் தனியாக நின்று போராடினார். எனினும் பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களையிழந்து 333 ஓட்டங்களை மாத்திரமெடுத்து 48 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

முஸ்பிகீர் ரகீம் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களை எடுத்தார்.



பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்ராக், குல்டர் நைல் மற்றும் ஸ்ரோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,113,Astrology,30,cinema,269,doctor,13,Gallery,131,india,431,Jaffna,3854,lanka,9419,medical,7,Medicial,39,sports,418,swiss,15,technology,84,Trending,4618,Videos,10,World,670,Yarlexpress,4355,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: ஆஸியிடம் போராடித் தோல்வியடைந்தது பங்களாதேஷ்
ஆஸியிடம் போராடித் தோல்வியடைந்தது பங்களாதேஷ்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgebnt7v9rEBZS8FhlHcEhtn5bqp3-5wek-IMYgFdQ3BgGIlRxdKsrU4Goo1Z4Jwffvxiu8vS3Q-UN0Rk85GZSZz4FIqztdc3-61O2b-Tv5Be1hFRkO4MY_anVZMF1B576NZrxqLqpqu1I/s640/David-Warner-825x500-AP.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgebnt7v9rEBZS8FhlHcEhtn5bqp3-5wek-IMYgFdQ3BgGIlRxdKsrU4Goo1Z4Jwffvxiu8vS3Q-UN0Rk85GZSZz4FIqztdc3-61O2b-Tv5Be1hFRkO4MY_anVZMF1B576NZrxqLqpqu1I/s72-c/David-Warner-825x500-AP.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2019/06/blog-post_895.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2019/06/blog-post_895.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content