அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பல்வேறு ஊகங்கள் கிளம்பினாலும், சிங்கப்பூரிலிருந்து கோத்...
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பல்வேறு ஊகங்கள் கிளம்பினாலும், சிங்கப்பூரிலிருந்து கோத்தபாய ராஜபக்ச திரும்பி வரும் வரையில் வேட்பாளர் தொடர்பான எந்த முடிவும் எட்டப்படாது என தெரிகிறது. கோத்தபாய ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர், அவருடனும் ஆலோசித்த பின்னரே வேட்பாளர் இறுதிசெய்யப்படுவார் என தெரிய வருகிறது.
பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச கிட்டத்தட்ட உறுதியாக நிலைமையிருந்தது. ஆரம்பத்தில் கோத்தபாயவை வேட்பாளராக்குவதில் மஹிந்த உடன்படாவிட்டாலும், தன்னை வேட்பாளராக அறிவிக்காவிட்டால் தான் தனித்து போட்டியிடுவேன் என மஹிந்தவிடமே நேரில் தெரிவித்திருந்தார் கோத்தபாய ராஜபக்ச.
இதையடுத்து, கோத்தபாயவை களமிறக்கும் முடிவிற்கு மஹிந்த மஹிந்த வந்திருந்தார்.
கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்குதில் ஆரம்பத்தில் பசில், சிராந்தி ராஜபக்ச எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பின்னர், பசிலை சமரசம் செய்திருந்தார் மஹிந்த. இதனால் குடும்பத்திற்குள் வேட்பாளர் தொடர்பான ஒருமித்த முடிவு கிட்டத்தட்ட ஏற்பட்டிருந்தது.
இந்தநிலையில் திடீரென இருதய சத்திரசிகிச்சைக்கு கோத்தபாய உள்ளாகினார். By pass சத்திரசிகிச்சைக்குள்ளானால் குறிப்பிட்ட காலம் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் 3 மாதங்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என்பதால் செப்ரெம்பர் வரை அவர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவது சிரமம். அதை தவிர்த்தால், ஜனாதிபதி தேர்தலிற்கு ஒன்றரை மாதங்களே இருக்கும்.
இந்த காலத்தில் கோத்தபாய பிரசாரங்களை முன்னெடுத்து வெற்றிபெறலாமா, ஒன்றரை மாதத்திற்குள் சூறாவளியாக சுழன்று பிரசாரத்தில் ஈடுபட வாய்ப்புண்டா என்பதெல்லாம் மஹிந்த முகாமில் யோசனையை தோற்றுவித்துள்ளது.
இதனால் இந்த மாத இறுதியின் பின்னர் நாடு திரும்பும் கோத்தபாயவிடம் வேட்பாளர் விடயமாக பேச்சு நடத்த மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார். கோத்தபாயவின் சம்மதத்துடன் பசில் ராஜபக்சவை களமிறக்கலாமா என்றும் மஹிந்த தரப்பில் யோசனையுள்ளது.