முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச நாளை மறுநாள் (6) இலங்கை திரும்புகிறார். இலங்கை வந்த உடனேயே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான...
முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச நாளை மறுநாள் (6) இலங்கை திரும்புகிறார். இலங்கை வந்த உடனேயே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளில் அவர் இறங்கவுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச, சிங்கப்பூரில் இதய சத்திரசிகிச்சை மேற்கொண்டிருந்தார். சுமார் ஒரு மாத ஓய்வில் இருந்த கோத்தபாய, நாளை மறுநாள் இலங்கை திரும்புகிறார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச களமிறங்குகிறார் என்ற தகவல் சில காலமாக அரசல் புரசலாக அடிபட்டு வந்தது. எனினும், ராஜபக்ச குடும்பத்திற்குள்ளும், கூட்டு எதிரணிக்குள்ளும் கோத்தபாயவிற்கு ஓரளவு எதிர்மனப்பான்மை இருந்து வந்தது. கோத்தபாயவை களமிறக்க மஹிந்த ராஜபக்சவும் ஆரம்பத்தில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை.
இந்தநிலையில், பொதுஜன பெரமுனவின் சார்பில் தான் களமிறக்கப்படாவிட்டால், தனித்து களமிறங்குவேன் என கோத்தபாய ராஜபக்ச நேரடியாகவே மஹிந்த ராஜபக்சவிடம் கூறியிருந்தார். இதையடுத்து, உள்ளக குழப்பங்களை சமாளித்து, கோத்தபாயவையே வேட்பாளராக்க மஹிந்த தீர்மானித்திருந்தார்.
இந்தநிலையில், அமெரிக்க நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்கு, மற்றும் கோத்தபாயவிற்கு ஏற்பட்ட திடீர் இருதய கோளாறு ஆகியன, அடுத்த வேட்பாளர் யார் என்ற கேள்வியை மீளவும் எழ வைத்தது.
இருதய சத்திரசிகிச்சை மேற்கொண்டால் குறைந்தது மூன்று மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டுமென்பதால், கோத்தபாய களமிறங்காமல் போகலாமென்ற அபிப்பிராயமும் எழுந்தது. எனினும், இந்த கருத்துக்களிற்கு மாறாக, கோத்தபாய ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவது உறுதியாகி விட்டது.
அமெரிக்க வழக்குகள் மற்றும் குடியுரிமை சர்ச்சையை சுமுகமாக தீர்க்கலாமென கோத்தபாய ராஜபக்ச கருதுவதாக தெரிகிறது.
சிங்கப்பூரில் தற்போது மருத்துவ ஓய்வில் உள்ள கோத்தபாய ராஜபக்ச, நாளை மறுநாள் இலங்கை திரும்புகிறார். கட்டுநாயக்க விமானநிலையத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பளிக்க, பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. வாகன தொடரணியாக அவர் அழைத்து செல்லப்படுவார்.
வரும் 11ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக கோத்தபாய ஆரம்பிக்கிறார.
களனி ரஜ மகா விகாரையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டு, தேர்தல் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கிறார்.
இலங்கையிலுள்ள பௌத்த தலங்களில் மிக தொன்மையானதென கருதப்படுவதும், கௌதம புத்தர் கடைசியாக இலங்கைக்கு வந்தபோது பரிசுத்தமாக்கப்பட்ட தலமென கருதப்படுவதும், புத்தர் சமாதியடைந்த அரச மரத்தின் கிளையொன்றை கி.மு 3ம் நூற்றாண்டில் இந்த ஆலயத்தில் நாட்டியதாகவும் கூறப்படும், களனி ரஜ மகா விகாரையிலேயே கோத்தபாயவின் தேர்தல் பணிகள் ஆரம்பிக்கிறது.
இதன்மூலம், சிங்கள பௌத்த மக்களின் பிரதிநிதியென்ற தோற்றம் கோத்தபாய மீது ஏற்படுமென பெரமுன நம்புகிறது.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சரத் பொன்சேகா ஆகியோரும் தமது தேர்தல் பணிகளை இந்த விகாரையிலிருந்தே ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.