குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரம் மட்டுமே ஜனாதிபதியிடம் உள்ளது. ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனா...
குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரம் மட்டுமே ஜனாதிபதியிடம் உள்ளது. ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் கிடையாது. எதிர்வரும் நவம்பர் 15ம் திகதிக்கும், டிசம்பர் 7ம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகவியலாளர் மத்தியில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விளக்கம் அளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவில் பிரதான கேட்போர் கூடத்தில் இன்று காலை இந்த சந்திப்பு நடந்தது.
எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் அவசியம் நடத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி தேர்தல் நடத்துவது குறித்து ஜனாதிபதி பிரதமர் சபாநாயகர் உள்ளிட்ட பொறுப்பு கூறவேண்டிய தரப்பினருக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதை தவிர்க்க முடியாது என்றும் அவர் கூறினார். இதனை செய்யக்கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே உள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பிட்ட தினத்துக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை முன்னெடுப்பதற்கு மாத்திரம் முடியும் என்றும் அதனை ஒத்திவைக்கமுடியாது என்றும் அவர் கூறினார்.