யாழ் மாநகரசபை பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அனுமதியில்லாத 5 ஜி கோபுரங்கள், வலி வடக்கு பிரதேசசபைக்குள்ளும் நுழைந்துள்ளது. வலி வடக்கு பி...
யாழ் மாநகரசபை பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அனுமதியில்லாத 5 ஜி கோபுரங்கள், வலி வடக்கு பிரதேசசபைக்குள்ளும் நுழைந்துள்ளது. வலி வடக்கு பிரதேசசபையின் அனுமதியின்றி, தவிசாளரின் தன்னிச்சையான முடிவின் மூலம் கோபுரம் நடப்பட்டுள்ளது.
வலி வடக்கு பிரதேசசபைக்குட்பட்ட ஜே 251 கிராமசேவகர் பிரிவிலுள்ள ஆவளை மயான காணிக்குள் இந்த கோபுரம் நடப்பட்டுள்ளது.
பிரதேசசபைக்கு சொந்தமான இந்த காணிக்குள், பிரதேசசபையில் அனுமதி பெறப்படாமல் கோபுரம் நடப்பட்டுள்ளது. பிரதேசசபை தவிசாளரான, தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் உதவியாளரான சோ.சுகிர்தனின் தனப்பட்ட அனுமதியின் அடிப்படையில் இந்த கோபுரம் நடப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.
பிரதேசசபையின் அனுமதியின்றி இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இதன் பின்னணி குறித்து பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.