புத்தளம் பகுதியில் சுமாா் 6800 பாலுணா்வு மாத்திரைகள் மற்றும் பல சட்டவிரோத பொருட்களுடன் 61 வயதான பிரபல கடத்தல்காரா் கைது செய்யப்பட்டிருக்கின...

புத்தளம் பகுதியில் சுமாா் 6800 பாலுணா்வு மாத்திரைகள் மற்றும் பல சட்டவிரோத பொருட்களுடன் 61 வயதான பிரபல கடத்தல்காரா் கைது செய்யப்பட்டிருக்கின்றாா்.
கடற்படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து நடத்திய திடீா் முற்றுகையின்போதே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டிருக்கின்றது.
கைதான சந்தேக நபரிடமிருந்து 6800 பாலுணர்வு மாத்திரைகள் கொண்ட 272 பொதிகளை மீட்டெடுத்துள்ளதுடன்,
அவரது கடை மற்றும் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 80 சட்டவிரோத சிகரெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் 61 வயதான புத்தளம், பாழவிய பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.




