வன்னி தமிழர்கள் புதிய போராட்டத்திற்கு தயாராகுங்கள்-பரமேஸ்வரன் கார்த்தீபன்

வன்னி தமிழர்கள் புதிய போராட்டத்திற்கு தயாராகுங்கள்-பரமேஸ்வரன் கார்த்தீபன்

சிறிரெலோ இளைஞரணி தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபனின் ஊடக அறிக்கை!! வன்னி தமிழர்கள் புதிய போராட்டத்திற்கு தயாராகுங்கள் என சிறிரெலோ கட்சியின் இள...

சிறிரெலோ இளைஞரணி தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபனின் ஊடக அறிக்கை!!

வன்னி தமிழர்கள் புதிய போராட்டத்திற்கு தயாராகுங்கள் என சிறிரெலோ கட்சியின் இளைஞரணி தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் தெரிவித்துள்ளார் தொடர்ந்தும் அவரது அறிக்கையில்

“” மீண்டும் ஓர் போராட்டத்திற்கு தயாராகுங்கள் இப்போராட்ட ஆயுதம் வேறொன்றும் இல்லை தமிழனின் தலையெழுத்தை மாற்றுவதற்கு இப்பொழுது இருக்கும் ஓரே ஆயுதம் வாக்கு என்ற ஆயுதமே!
இனியும் வன்னித்தமிழன் மாற்றான் காலில் விழ வழிவிடாது புதிய வரலாற்றை படைப்போம்!

இனிவரும் காலம் தேர்தல் காலம் எனவே வன்னி தமிழன் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் படிச்சவனுக்கு வேலை இல்லை என்றும் அமைச்சரின் காலை பிடித்தால் தான் வேலை என்ற தலையெழுத்தையும் எங்கள் மாட்டை வெட்டி அந்த பணத்தை எங்கள் கோவில்களுக்கும் கிராமங்களுக்கும் வழங்கும் வரலாற்றை மாற்றி அமைப்போம் ..!

கடந்த காலங்களில் விட்ட தவறுகளை திருத்திக்கொண்டு எங்கள் இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்திற்கும் எங்கள் கிராமங்களின் அபிவிருத்திக்கும் தமிழரின் வாக்குகளை தமிழர்களுக்கே வழங்குவதற்கு தயாராகுங்கள்

வன்னியில் பெரும்பான்மை தமிழர்கள் வாழும்பொழுது எவ்வாறு இரண்டு ஆசனங்கள் தமிழர்கள் அல்லாதவர்களுக்கு செல்கின்றது? நீங்களே சிந்தியுங்கள் வேற்று இனத்தவர் யாரேனும் எமக்கு வாக்கிளிப்பார்களா..? அல்லது தங்களது கிராமத்திற்குள் பிரச்சாரம் செய்ய என்றாலும் உள்நுழைய விடுவார்களா..? அல்லது தமிழ் வேட்பாளர்களுக்காக வாக்கு கேட்டு அவர்கள் வருவார்களா..?
ஆனால் தம்மை நடுநிலைவாதிகள் என காட்டிக்கொள்ளும் சிலர் அவர்களுக்காக வாக்கு கேட்டு வருவதுடன் அவர்களை தமிழர் கிராமத்திற்குள்ளும் அழைத்து வருகிறார்கள் உண்மையில் நாங்கள் முதலில் புறக்கணிக்க வேண்டியது இது போன்ற நடுநிலைவாதிகளை தான்!

எனவே இனியும் வன்னி தமிழன் மாற்றான் காலில் விழ வழிவிடாது எங்கள் அபிவிருத்திகளை நாங்களே மேற்கொள்வதற்கு ஒவ்வொரு தமிழனும் தமிழனுக்கே வாக்களிப்போம்!

உரிமை, தேசியம் பேசுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது சைக்கிள் காரரோ பேசிக்கொண்டே இருக்கட்டும் அவர்கள் ஒவ்வொரு தீபாவளிக்கும் தீர்வை பெற்று தந்துகொண்டே இருப்பார்கள் நாங்களும் இன்று போய் நாளை வா என்பதுபோல் நம்பிக்கொண்டே இருப்போம் ஆனால் எங்களின் இளைஞர்களின் எங்கள் கிராமங்களின் அபிவிருத்திக்காவும் ஏற்கனவே எங்கள் வன்னியில் அபிவிருத்திகளை செய்து கொண்டிருக்கும் தமிழருக்கு வாக்களிப்போம் எமது பிள்ளைகள் என்றாலும் தமிழனாக தலை நிமிர்ந்து நிற்கட்டும்

தன் தாய் நிலத்தில் கூலி தொழிலாளர்களுக்கு எந்த தீர்வையும் பெற்றுக்கொடுக்க முடியாத முதுகெலும்பில்லாத சிலர் வன்னி தமிழரை ஏமாற்றி பிழைப்பு தேட வந்துள்ளனர் அவர்களுக்கும் ஓர் படிப்பினைகளை காட்டுங்கள்…

நாம் தமிழர்கள் இங்கு வன்னி தமிழன், கிழக்கு தமிழன் , யாழ் தமிழன், மழையக தமிழன், இந்திய தமிழன் என்ற பிரிவினை உண்டு பன்னி தமது சுயநல அரசியல் செய்பவர்களும் புறக்கணிக்க வேண்டியவர்களே…!
நாம் தமிழன் என்று மட்டும் சிந்தியுங்கள்

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,113,Astrology,30,cinema,269,doctor,13,Gallery,131,india,430,Jaffna,3854,lanka,9417,medical,7,Medicial,39,sports,418,swiss,15,technology,84,Trending,4618,Videos,10,World,670,Yarlexpress,4355,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: வன்னி தமிழர்கள் புதிய போராட்டத்திற்கு தயாராகுங்கள்-பரமேஸ்வரன் கார்த்தீபன்
வன்னி தமிழர்கள் புதிய போராட்டத்திற்கு தயாராகுங்கள்-பரமேஸ்வரன் கார்த்தீபன்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_OS0lMgwztXFho15rKqozUHOPLmdTl9ICJBHzYZTPfqzFT7LVr9-7hiXVzXeoQjZglhroUFT8faJVIvnJWZ1af4_-12-kyRsCPmHvug-K_kf5HWF4AULxIBgeFvgTpmBe0hgIWWIdYXI/s640/WhatsApp+Image+2019-07-18+at+20.38.59.jpeg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_OS0lMgwztXFho15rKqozUHOPLmdTl9ICJBHzYZTPfqzFT7LVr9-7hiXVzXeoQjZglhroUFT8faJVIvnJWZ1af4_-12-kyRsCPmHvug-K_kf5HWF4AULxIBgeFvgTpmBe0hgIWWIdYXI/s72-c/WhatsApp+Image+2019-07-18+at+20.38.59.jpeg
Yarl Express
https://www.yarlexpress.com/2019/07/blog-post_109.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2019/07/blog-post_109.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content