எங்களுக்கு கட்சி நலனோ தலைமைப் பதவியோ முக்கயமல்ல. கொள்கைதான் எப்போதும் எங்களுக்கு முக்கியம். ஆகையினால் நாங்கள் பொய் சொல்வதாக தற்போது சொல்கின்...
எங்களுக்கு கட்சி நலனோ தலைமைப் பதவியோ முக்கயமல்ல. கொள்கைதான் எப்போதும் எங்களுக்கு முக்கியம். ஆகையினால் நாங்கள் பொய் சொல்வதாக தற்போது சொல்கின்ற தரப்பினர்கள் அதன் உண்மைகளை நாங்கள் வெளிப்படுத்துகின்றபோது அரசியலில் இருந்து ஒதுங்க தயாரா என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சவால் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த ஊடக சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விக்கினேஸ்வரன் தலைமையிலான புதிய கூட்டணிக்குள் இணைந்தால் விக்கினேஸ்வரனுக்குப் பின்னராக அடுத்த தலைமையை கஜேந்திரகுமாருக்கு தருவதாக விக்கினேஸ்வரனே சொல்லியிருந்ததாக அண்மையில் தமிழ்த் தேசியமக்கள் முன்னணி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தது.
ஆனால் சிலதினங்களிற்கு முன்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைபரப்புச் செயலாளர் அருந்தவபாலன், அவ்வாறு தலைமைத்துவப் பதவி எதனையும் வழங்குவது தொடர்பில் பேசவில்லை என்றும் அவ்வாறு வழங்குவதாகசொன்னதாகக் கூறுகின்ற கருத்தும் பொய் என்று மறுத்திருந்தார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்ததாவது,
எங்கள் கட்சிச் சின்னத்தில் வருவதாக விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். அதேபோல தனக்கு அடுத்ததாக தலைமைப் பதவியையும் எங்களுக்கு கொடுப்பதாக விக்னெஸ்வரன் ஐயாதான் தெரிவித்திருக்கின்றார். அவ்வாறு அவர் தெரிவித்த எழுத்து மூல ஆவணங்கள் எங்களிடம் இருக்கின்றன. ஆகவே அவ்வாறு ஏதும் இல்லை என்றும் அது எல்லாம் பொய் என்றும் சிலதரப்பினர்கள் கூறி வருகின்றனர்.
அவை எல்லாம் பொய் என்றும் தாம் சொல்வதே உண்மை என்றும் இப்பொது கூறுகின்றவர்கள், அந்த எழுத்து மூலமான உண்மை விடயங்களை நாங்கள் பகிரங்கப்படுத்தினால் அல்லது அந்தஉண்மைகள் வெளிவருகின்றபோது அரசியலில் இருந்து ஒதுங்குவதற்குத் தயாராக இருக்க வேண்டும். அத்தகைய சவாலை ஏற்றுக் கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றனரா?
ஆனாலும் பொய்களை உண்மைகளாகச் சொல்பவர்கள் சொல்லட்டும். அதனை ஊடகங்களும் பிரசுரிக்கட்டும். ஆனால் அதே பொய்களை உண்மை என நாங்கள் நிருபிக்கின்ற போது என்ன செய்யப் போகின்றனர் என்பதையும் பார்ப்போம். அதனை ஊடகங்களும் பிரசுரிக்க வேண்டும். ஆகவே இப்போதைக்கு எங்களைப் பற்றிச் சொல்பவர்கள் எதனையும் சொல்லட்டும். அதற்கான நேரங்கள் வருகின்றபோது ஆதாரங்களுடன் அனைத்தையும் நாங்கள் வெளிப்படுத்துவோம்.

இதேவேளை எங்களுக்கு கட்சிநலனும் தலைமைப்பதவியும் தான் முக்கியம் என்று பலரும் சொல்கின்றனர். ஆனால் இந்த இரண்டும் இப்போது புதிய கூட்டணியில் எங்களுக்கு தருவதாக சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகையினால் அதற்கமைய நாங்களும் அதில் இணையலாம் தானே. ஆனால் கொள்கைதான் முக்கியம். அதற்காக நாம் பதவியையோ கட்சி நலனையோ எதிர்பார்க்கவில்லை என்பதை தெளிவாகச் சொல்லிவைக்க விரும்புகின்றோம் என்றார்.