எதிர்வரும் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து, அரசுக்கு எதிர்ப்பை வெளியிட வேண்டுமென தமிழ் அரசியல்வாதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் வலிந்த...
எதிர்வரும் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து, அரசுக்கு எதிர்ப்பை வெளியிட வேண்டுமென தமிழ் அரசியல்வாதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்.
இன்று (8) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநாச்சியில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி யோகராசா கனகரஞ்சினி ஊடக சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“எமது அரசியல் தலைமைகள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் இதய சுத்தியுடன் செயற்படவில்லை. வெளிநாடுகளிற்கு செல்கின்றனர், பிரதிநிதிகளாக ஜெனிவாவிற்கு செல்கின்றனர், நாடாளுமன்ற அமர்வுகளில் தவறாது கலந்துகொள்கின்றனர். ஆனால் எமது பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் பேசியதாக தெரியவில்லை. காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் தொடர்பில் அக்கறையற்றவர்களாகவும், மறந்தவர்களாகவும் எமது அரசியல் தலைமைகள் செயற்படுகின்றன.

இந்த நிலையில் தமிழ் மக்களின் நலனிற்காகவு்ம, காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளிற்காகவும் வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிர்ப்பை வெளியிட வேண்டும். நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களித்து அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடயங்களை மறந்து இன்று கம்பெரலியவிற்கும், சமுர்த்தி உள்ளிட்ட அபிவிருத்திகளிற்கும் முன்னுரிமை கொடுத்து செயற்படுவதை நாம் காண்கின்றோம். எமது பிரச்சினைகள் தொடர்பில் பேசுவார்கள் என எதிர்பார்த்த அவர்கள் இன்று அவற்றை மறந்து செயற்படுகின்றனர்.
தமிழ்மக்களின் நலன் சார்ந்து செயற்படவும், எமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் விடயத்தில் அக்கறையாக செயற்பட வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு கோரிக்கை விடுகிறோம்“ என்றார்.