இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டி நகரில் பொதுபலசேனா அமைப்பின் பிரமாண்ட மாநாடு இடம்பெறுகிறது. இதையொட்டி கண்டியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ...
இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டி நகரில் பொதுபலசேனா அமைப்பின் பிரமாண்ட மாநாடு இடம்பெறுகிறது. இதையொட்டி கண்டியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுவதை அவதானிக்க முடிகிறது.
கண்டி போகம்பர மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த மாநாடு இடம்பெறுகிறது. நாடெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கான பிக்குகளை ஒன்று திரட்டி மாநாட்டை நடத்தவுள்ளதாக பொதுபலசேனா அறிவித்திருக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக 7 தீர்மானங்கள் இன்று எடுக்கப்படவுள்ளன.
முஸ்லிம்களிற்கு எதிரான நோக்கத்துடன் இந்த மாநாடு நடப்பதாக கருதப்படுவதால் கண்டிப்பகுதிகளிலுள்ள முஸ்லிம் பகுதிகளில் ஒருவித பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இன்றைய மாநாட்டையொட்டி, கண்டி நகருக்குள்ளால் போக்குவரத்து செய்வதை தவிர்த்துகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபையின் கண்டிக்கிளை கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று காலை 9 மணியிலிருந்து கண்டிக்கு பௌத்த பிக்குகளை வரவழைக்க பொதுபலசேனா திட்டமிட்டுள்ளது.
மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு சிங்கள மக்களிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலையில் தலதா மாளிகையில் நடக்கும் வழிபாட்டிலும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று ஏதேனும் அசம்பாவிதம் நிகழலாமென்ற அச்சம் சிறுபான்மையினர் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று கண்டி நகரில் தமிழ் மொழி மூலமான சகல தனியார் வகுப்புக்களும் இரத்து செ்யப்பட்டுள்ளன. நேற்றும் இந்த வகுப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.