சிறுபான்மை மக்களின் பிரச்சனைகள், தேவைகள் அறிந்து சிறுபான்மை மக்களை மதித்து அக்கறையுடன் செயற்படும் ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி தான். அந்தக...
சிறுபான்மை மக்களின் பிரச்சனைகள், தேவைகள் அறிந்து சிறுபான்மை மக்களை மதித்து அக்கறையுடன் செயற்படும் ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி தான். அந்தக் கட்சி அதிகாரத்தில் இருந்தால் தான் இனப்பிரச்சனைக்குத் தீர்வையும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழும் சூழலையும் ஏற்படுத்தலாமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான விஐயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்து சமய விவகார அமைச்சின் ஏற்பாட்டில் தெய்வீக சேவைத் திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ் இலங்கை வேந்தன் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் விருந்தினராகக் கலந்த கொண்ட உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இந்து ஆலயங்களுக்கு என்ன நடந்ததென்பது அனைவருக்கும் தெரியும். அது மட்டுமல்லாமல் மத ரீதியான பிரச்சனைகளும் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால் இன்றைக்கு அவ்வாறான பிரச்சனைகள் தொடர்பில் அதிக அக்கறையெடுத்து தீர்த்து வைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கமைய இன்றைய இந்து கலாசார அமைச்சர் தன்னாலான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார்.
அதே நேரத்தில் இன்னும் பல ஆலயங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. அது எங்களுக்கு மிக மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றன. இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கின்ற இந்து ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த நாட்டில் அடுத்து ஒரு தேர்தல் வர இருக்கின்றது. அது ஐனாதிபதித் தேர்தலாகவே இருக்கப் போகின்றது. அதில் சரியான முடிவை அனைவரும் எடுக்க வேண்டியது அவசியமானது. அந்தத் தேர்தலில் ஒரு கட்சியைச் சேர்ந்தவர் போட்டியிட வேண்டும். அப்போது தான் அனைத்தையும் தீர்த்துக் கொள்ளலாமென்று நினைக்கின்றேன்.
குறிப்பாக நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களை மதிக்கிறதும் அவர்களது பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கின்றதும் எங்களது ஐக்கிய தேசியக் கட்சி தான். வடக்கு கிழக்கு மலையகம் என அனைத்து சிறுபான்மை மக்களுக்காகவும் எமது கட்சியே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது. ஆகையினால் எமது கட்சி அதிகாரத்திற்கு வருகின்ற போது நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்ற இனப்பிரச்சனைக்கு தீர்வை ஏற்படுத்தலாம். அத்தோடு அனைத்து மக்களும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழக் கூடியதாக இருக்குமென்றார்.