இனப்பிரச்சனைக்கு இரண்டு வருடத்திற்குள் தீர்வைக் கொடுக்கப் போவதாக பிரதமர் கூறியிருப்பது தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற வாக்குறுதியாகவே பார்க்கின்ற...
இனப்பிரச்சனைக்கு இரண்டு வருடத்திற்குள் தீர்வைக் கொடுக்கப் போவதாக பிரதமர் கூறியிருப்பது தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற வாக்குறுதியாகவே பார்க்கின்றோம். அதேநேரத்தில் தமிழ் மக்களுக்குத் தீர்வைக் கொடுப்பதற்கு தமக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறுவதும் வேடிக்கையானது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தீர்வைக் கொடுக்கப் போவதாக பிரதமர் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் விஐயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிமசிங்க தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற வாக்குறுதியை வழங்கியிருக்கின்றார். அதாவது இன்றும் இரண்டு மூன்று வருடங்களுக்குள் தான் இனப்பிரச்சனையைத் தீர்க்கப் போவதாக ஒரு கருத்தொன்றையும் அவர் முன்வைத்திருக்கின்றார். அதனூடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் தொடர்ந்தும் கைவிடக் கூடாது என்பதுடன் தொடர்ந்தும் தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு ஆதரவை வழங்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பைத் தான் அவர் அங்கே ஏற்படுத்தியிருக்கின்றார்.
தமிழ் மக்களுக்குத் தீர்வு கொடுக்க வேண்டுமென்று எண்ணம் ரணில் அரசாங்கத்திடமோ, மகிந்த அரசாங்கத்திடமோ அல்லது இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களிடமோ அல்லது இனி வரப் போகின்ற அரசாங்கங்களிடமோ இல்லை என்பதுதான் எங்களுடைய கருத்தாகஉள்ளது. அதாவது தாமாக விரும்பி தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க வேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கு கிஞ்சித்தும் கிடையாது.
மாறாக தமிழ் மக்கள் தமக்கு கிடைக்கின்ற வாய்ப்புக்களை அதாவது தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகள் தமக்கு கிடைக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுத்து அரசாங்கம் தீர்வைத் தரவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கினாலேயன்றி இந்த சிங்கள பௌத்த பேரினவாத அரசுகள் ஆட்சியாளர்கள் ஒருபொழுதும் தமிழர்களுக்கு தாமாக விரும்பி தீர்வுகள் எதனையும் தரப்போவதில்லை. இது வரலாறு எங்களுக்கு நிரூபித்திருக்கின்ற தெளிவான ஒரு பாடமாக இருக்கின்றது.
இவ்வாறிருக்கின்றபோது அவர் ஏதோ புதிய அரசமைப்பை கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு தங்களுக்கு பெரும்பான்மை இல்லை என்பது போலவும் அது நிறைவேற்றிவிட்டால் தமிழர்களுக்கு தீர்வு வந்துவிடும் என்பது போலவும் இன்னமும் இரண்டு மூன்று வருடங்களில் தான் அதனைச் செய்துவிடுவேன் என்ற தோரணையிலும் யாழ்ப்பாணத்தில் வந்து கதைத்தது வடக்கு கிழக்கு வாழ்கின்ற தமிழர்கள் வெறும் முட்டாள்கள் என்ற அடிப்படையிலான கருத்தாக அமைந்திருக்கின்றது.
ரணில் விக்கிரமசிங்கவின் இந்த ஏமாற்றுத் தனத்தை எங்களுடைய மக்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இது திரும்ப திரும்ப தங்களுடைய அரசிற்கு முண்டு கொடுத்திருக்கின்ற கூட்டமைப்பை பாதுகாக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக அவர் கூறியிருக்கின்ற ஏமாற்று பசப்பு வார்த்தைகளே தவிர ஒரு பொழுதும் அவர்கள் தீர்வு எதனையும் தரப்போவதில்லை.
மேலும் ரணில் விக்கிரமசிங்க தமிழர்களுக்குத் தீர்வு கொடுப்பதற்கு பாராளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை இல்லை என்று சொல்லுகின்றார். அது தமிழ் மக்களை முற்றிலும் ஏமாற்றுகின்ற ஒரு செயற்பாடு. அவருக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்த காரணத்தால் தான் அவருக்கு எதிராகவும் அவரது ஆட்சிக்கு எதிராகவும் கொண்டுவந்த பிரேரனைகளில் அவர் தன்னுடைய பெரும்பான்மையை நிருபித்துக் காட்டியிருக்கின்றார்.
ஆகவே பெரும்பான்மை இல்லை என்று சொல்வதெல்லாம் மக்களை முட்டாள்கள் என்று நினைத்தக் கொண்டு சொல்கின்ற கதைகளே தவிர வேறொன்றுமில்லை. தங்களுடைய ஆதரவுப் பலத்தால் 19 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கின்றார்கள். ஆக இந்திய மேற்குநாடுகளின் நலன்களைப் பேனுவதற்காக இந்த அரசிமைப்பில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. அந்த மாற்றங்களை எல்லாம் செய்வதற்கு பெரும்பான்மையை பெற்றுக் கொண்டு வேண்டிதெல்லாத்தையும் செய்திருக்கின்றார்கள்.
ஆனால் தமிழர்களுக்கு தீர்வு கொடுக்கின்ற விடயத்தில் மட்டும் பெரும்பான்மை இல்லை என்று கூறுவது தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற ஒரு செயற்பாடு. தமிழ் மக்களுக்கு தீர்வுகொடுக்கப் போனால் பெரும்பான்மையான சிங்கள மக்கள் தங்களுக்கு எதிராக கிளம்பி விடுவார்கள் அவ்வாறு கிளம்பினால் அந்தஆட்சி கவிழ்ந்துவிடும். அந்த ஆட்சி கவிழ்ந்தால் இந்திய, மேற்கு நாடுகளின் நலன் சார்ந்த ஆட்சி வீழ்ந்துவிடும். அது இந்திய மேற்கிற்கு மாறானவர்கள் ஆட்சிபீடம் ஏற வழிவகுத்துவிடும். ஆகவே தமிழ் மக்களுக்கு உரிமைகளைக் கொடுக்காமல் சாட்டுக்களைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டு செல்ல வேண்டுமென்ற அரசின் நிலைப்பாட்டிற்கு இந்திய, மேற்கு நாடுகளும் துணைபோகின்றதென்பது இங்கு உண்மையாக இருக்கிறது என்றார்.