தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட விசேட குழுவினர் இன்று திங்கட்கிழமை 15/07/2019 மாலை 4 மணிக்கு அளவில் திருகோணமலை கன்னியா பிள்ளையார் ...
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட விசேட குழுவினர் இன்று திங்கட்கிழமை 15/07/2019 மாலை 4 மணிக்கு அளவில் திருகோணமலை கன்னியா பிள்ளையார் ஆலயத்தை தொல்லியல் திணைக்களம் மூலம் அபகரிக்கும் நடவடிக்கையை நேரில் சென்று பார்வையிட்டதுடன் தென் கையிலை ஆதின சுவாமியை அவரது ஆதீனத்திலும் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ரெலோ குழுவினர் கலந்துரையாடியுள்ளார்கள்.
மேலும் தெரிவிக்கையில் தொல்பொருள் திணைக்களம் எனும் போர்வையில் தமிழர் தாயக பிரதேசத்தில் தொடர்ச்சியாகவும் திட்டமிட்டமுறையிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கிரமிப்புக்களின் ஒரு கட்டமாக திருகோணமலை கன்னியாவில் விநாயகர் ஆலயம் உடைக்கப்பட்டு அவ்விடத்தில் அரச அதிகாரத்தின் துணையுடன் விகாரை அமைக்கும் முயற்சியினை தடுக்கும் வண்ணம் பிரதேச வாழ் உணர்வுமிக்க இளைஞர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து மேற்கொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்ததுடன் தொடர்ச்சியாக அவர்களுடன் இணைந்து செயற்படுவது குறித்த கலந்துரையாடலும் இடம்பெற்றது.





