பிக்பாஸ் தமிழின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களுள் ஒருவராக நுழைந்திருக்கும் மீரா என்கிற தமிழ்செல்வி மீது ஏகப்பட்ட புகார்கள் போலீஸ் நிலையத்த...
பிக்பாஸ் தமிழின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களுள் ஒருவராக நுழைந்திருக்கும் மீரா என்கிற தமிழ்செல்வி மீது ஏகப்பட்ட புகார்கள் போலீஸ் நிலையத்தில் உள்ளன.
கடந்த மாதம் சென்னையில் அழகி போட்டி ஒன்றை நடத்த இருந்த இவர் இதற்காக பல மாடல் பெண்களிடம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார்.
இந்நிலையில் அழகி போட்டிக்காக தான் கொடுத்த 50 ஆயிரம் ரூபாயை திருப்பி தராமல் ஏமாற்றி விட்டதாக மீரா மிதுனுக்கு எதிராக ரஞ்சித் பண்டாரி என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, தமிழ்செல்வி என்கிற மீரா மிதுன் முன் ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்தார்.
அதில், தொழில் போட்டி காரணமாக, தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதால் முன்ஜாமின் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மீராமிதுனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 50 ஆயிரம் ரூபாய்க்கான பிணையை செலுத்தி முன்ஜாமீன் பெற்று கொள்ளவும், தேவைப்படும்போது விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.