எதிர்கால உலகத்திற்கு ஏற்ப இலங்கையை கட்டியெழுப்புவேன். அனைத்து இன மக்களும் அச்சமின்றி நாட்டில் வாழலாம் என தெரிவித்துள்ளார் பொதுஜன பெரமுனவின் ...
எதிர்கால உலகத்திற்கு ஏற்ப இலங்கையை கட்டியெழுப்புவேன். அனைத்து இன மக்களும் அச்சமின்றி நாட்டில் வாழலாம் என தெரிவித்துள்ளார் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச.
சுகததாச அரங்கில் நடைபெறும் பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று நாட்டுக்கு தேவை, நீதியான, ஊழலற்ற தலைவரே. அதை நான் செய்வேன். நாடு என்னிடம் எதிர்நோக்குவதை நான் நிறைவேற்றுவேன்.
இந்த நாட்டில் பிறந்த அனைத்து இன மக்களும் அச்சமின்றி வாழ முடியும். ஆனால் பயங்கரவாதத்திற்கும், அடிப்படைவாதத்திற்கும் நான் ஒருபோதும் இடமளியேன்.
2005ம் ஆண்டின் முன் மகிந்த சிந்தனையில் பெரும் அபிவிருத்திகளை முன்னெடுத்தோம். அதை தொடர வேண்டும்.
இந்தநாட்டிலுள்ள அனைவரும் பொருளாதார வசதியுடன் வாழக்கூடிய நிலைமையை உருவாக்குவேன். எதிர்கால உலகத்திற்கேற்ப இலங்கையை கட்டியெழுப்புவதே எனது நோக்கம்.
நாட்டிலுள்ள அதிகமானவர்கள் மீன்பிடி, விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். அவற்றை மெருகூட்ட, நவீன வசதிகளை முன்னெடுப்பேன். அரச திணைக்களங்களை நவீனப்படுத்தி, மக்களிற்கு சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்க வழியேற்படுத்துவேன்.
நகரம் மட்டுமல்ல, கிராமத்திலுள்ள அனைத்து வீதிகளும் புனரமைக்கப்படும். கிராமங்கள் நகரமாக்கப்படும். நகர அபிவிருத்தி திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், அதிக வருமானம் பெற தேசிய மட்டத்தில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். பிளாஸ்ரிக், பொலித்தீன் கட்டுப்படுத்தப்படும்.
நாங்கள் அனைத்து நாடுகளுடனும் உறவை பேண விரும்புகிறோம். ஆனால் யாருக்கும் அடிபணிந்திருக்க தயாராக இல்லை. எமது நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் ஏனைய நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவோம்.
பொய் வாக்குறுதிகள் கொடுத்து வாக்குகள் பெறும் கலாசாரத்தை இல்லாமல் செய்வோம். அந்த கலாசாரத்தை மாற்றுவோம். நீங்கள் எதர்பார்க்கும் விடயங்களை நிறைவேற்றுவேன். 30 வருட யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர தலைவர் மஹிந்தவிற்கு என்னால் உதவி புரிய முடிந்தது. என்றார்.