சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்க உத்தரவிடப்படவுள்ளது என வெளியான செய்தியை, வாசுதேவ நாணயக்கார மறுத்ததாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ...
சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்க உத்தரவிடப்படவுள்ளது என வெளியான செய்தியை, வாசுதேவ நாணயக்கார மறுத்ததாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்ட தகவல் இது-
புதிய ஜனாதிபதி தமிழில் தேசிய கீதம் பாடுவதை தடை செய்து எந்தவொரு பணிப்புரையும் விடுக்கவில்லை என வாசுதேவ நாணயக்கார எம்பி என்னிடம், “என்ன இது, வாசு?” என சற்றுமுன் அவரிடம் நான் கேட்ட போது தெரிவித்தார்.
இனி சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம்?
இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இதுவரை இது பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
ஜனாதிபதியாக தெரிவானதும், சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும் கோட்டாபய, விரைவில் தேசிய கீதம் தொடர்பான உத்தரவையும் பிறப்பிப்பார் என குறிப்பிடப்படுகிறது.
ஜனாதிபதி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உத்தரவிட்டுள்ளார். வழக்கமாக ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடரணியில் நோயாளர் காவு வண்டி உள்ளிட்ட 15- 20 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், 2 அல்லது 3 வாகனங்களையே தனது தொடரணியில் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
எனினும், புதிதாக மோட்டார் சைக்கிள் பாதுகாப்பை இணைக்க திட்டமிடப்பட்டள்ளது.
இதேநேரம், ஜனாதிபதியின் தொடரணி செல்லும் போது, வீதிகளை மூடுவதை நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படுமெனில், அது சிறுபான்மையினரின் அடிப்படை உரிமையை மீறும் மிகப்பெரிய அநீதியாக அமையுமென்பது குறிப்பிடத்தக்கது.