யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் கற்பனையானது. வருமானமாக காண்பிக்கப்பட்டதன் பாதி தொகை அரசினால் வழங்கப்படும் மானியங்களே. ஐ.தே.கவின் பிராந்...
யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் கற்பனையானது. வருமானமாக காண்பிக்கப்பட்டதன் பாதி தொகை அரசினால் வழங்கப்படும் மானியங்களே. ஐ.தே.கவின் பிராந்திய கட்சியாக தமிழ் அரசு கட்சி இருந்த கடந்த அரசாங்கமே இவ்வளவு மானியம் வழங்காத நிலையில், இந்த ஆட்சியில் அவ்வளவு மானியங்கள் கிடைக்க வாய்ப்பேயில்லை. ஆடம்பர செலவுகளிற்கே அதிக பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் தவறான வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களித்தோம் என தெரிவித்துள்ளது ஈ.பி.டி.பி.
யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டத்தை ஈ.பி.டி.பி எதிர்த்து வாக்களித்திருந்தது. இது குறித்து ஈ.பி.டி.பியின் 10 உறுப்பினர்களும் இன்று யாழில் விளக்கமளித்தனர்.
இதில் உரையாற்றிய மாநாகரசபை உறுப்பினர் மு.ரெமீடியஸ்,
கடந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்ட வருமானம் வரவில்லை. அதை பெற நடவடிக்கையெடுக்கவில்லை. 35 வீதமான செலவீனங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
நகர கடைத்தொகுதி கடைகளின் உரிமங்களை மாற்றுவது தொடர்பாக கடந்த வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டபோது அதை எதிர்த்தோம். அது சாத்தியமற்றது, வடமாகாணசபை அது பற்றிய நியதிச்சட்டங்களை உருவாக்காத நிலையில், அதை செய்ய மாநகரசபைக்கு அதிகாரமில்லையென்றோம். ஆனால், உரிமமாற்றத்தின் மூலம் 13 கோடி வருமானமென குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை.
இந்த வரவு செலவு திட்டத்திலும் நடைறைச்சாத்தியமற்ற அதேயளவு தொகையை- 13 கோடி ரூபா- வருமானமாக குறிப்பிட்டுள்ளனர். வடமாகாணசபை இல்லாத நிலையில், அதை செய்ய முடியாது. அப்படி செய்வது சட்டவிரோதமானது.
கடல் கடந்த பிரயாண செலவாக 1 கோடி ரூபா மக்கள் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் பணத்தில் இப்படி உலகம் சுற்ற வேண்டுமென்ற அவசியம் கிடையாது.
சோலைவரிக்கு கடந்த ஆண்டில் 4கோடி 64 இலட்சத்து 23 ஆயிரத்து 329 ரூபா மதிப்பீடு செய்யப்பட்டு, 4 கோடியே 23 இலட்சத்து 69 ஆயிரத்து 290 ரூபா பெறப்பட்டுள்ளது. இந்த முறை மத்திய அரசே பல வரிச்சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், மாநகரசபை வரவு செலவு திட்டத்தில் சோலை வரி 3 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. 12 கோடி 29 இலட்சத்து 39 ஆயிரம் ரூபாவாக குறிப்பிட்டுள்ளனர்.
120000 கோடி 85 இலட்சத்து 93 ஆயிரம் ரூபா எதிர்பார்க்கப்படும் மொத்த வருமானமாக காண்பிக்கப்பட்டுள்ளது. அரசின் மானியங்களாக 61 கோடி 9 இலட்சத்து 80 ஆயிரம் ருபா குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது எதிர்பார்க்கப்படும் வரமானத்தில் அரைவாசிப்பணம் அரசின் மானியம். அரசாங்கம் வரி வருமானங்களை குறைத்து, வரி வருமானமில்லாத நிலையில், அரசாங்கம் 61 கோடி ரூபாவை மாநகரசபைக்கு வழங்குமென கற்பனை கூட செய்ய முடியாது.
தற்போதைய முதல்வரின் கட்சி, ஐதேகவின் பிராந்திய கட்சியாகத்தான் செயற்பட்டது. பிராந்திய கட்சியாக செயற்பட்டபோதே, ஐ.தே.க அரசிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட வருமானங்களை அவர்களால் பெற முடியவில்லை. ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில், எதிர்பார்க்கப்பட்ட வருமானங்களை எப்படி பெறப்போகிறார்கள் என்ற கேள்வியுள்ளது.
மாநகரசபை எதிர்பார்க்கும் வருமானத்தில் 55, 60 வீதமானவை கற்பனையானவை, எதிர்பார்க்க முடியாதவை.
கடந்த வரவு செலவு திட்டத்தின் செலவீனங்களையே சரியாக செய்யாத நிலையிலும், தற்போது மாநகரசபையில் செலவிட பணமில்லையென குறிப்பிட்டு மாநரசபை நிலையான வைப்பில் இருந்து 100 மில்லியனை பெற முதல்வர் கடந்த அமர்வில் ஒப்புதல் கேட்டிருந்தார். அதற்கு அனுமதியளிக்கப்பட்டது. கடந்தமுறை செலவீனங்கள் சரியாக செய்யாமலேயே, மாநகரசபையிடம் நிதி இருக்கவில்லை. கடந்த அரசாங்கத்தின் பிராந்திய கட்சியாக இருந்தபோதும், அரசாங்கத்திடமிருந்தும், ஆளுனரிடமிருந்தும் அந்த பணத்தை பெற முடியவில்லை. ஆட்சி மாற்றத்தின் பின் எவ்வாறு இந்த வருமானத்தை பெறுவார்கள்?
மாநரசபையின் செயற்பாடு ஜனநாயக விரோதமானது. மாநகரசபையின் 45 உறுப்பினர்களில் ஈ.பி.டி.பி, சு.க தரப்பில் 12 உறுப்பினர்கள் உள்ளோம். கிட்டத்தட்ட 30 வீதத்திற்கு அண்மித்த தொகை. ஆனால், 2 பேருக்கு மட்டுமே வட்டார அபிவிருத்தியில் பணம் ஒதுக்கப்படுகிறது. அபிவிருத்தி திட்டங்களில் 5, 6 வீதமான பங்கே எமக்கு ஒதுக்கப்படுகிறது.
கற்பனையான வரவு செலவு திட்டமாக இது இருப்பதால் இதை எதிர்க்கிறோம் என்றார்.