பலாலிப் பிரதேசத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அருகே அமைக்க எதிர்பார்க்கப்படும் விமான நிலைய விற்பனை அங்காடிகளை அந்த ந...
பலாலிப் பிரதேசத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அருகே அமைக்க எதிர்பார்க்கப்படும் விமான நிலைய விற்பனை அங்காடிகளை அந்த நிலத்தின் உரிமையாளர்களிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அந்த நிலத்தின் உரிமையாளர்கள் விடுத்த் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் வழங்க முயற்சிக்கப்படுவதாக குற்றம் சாட்டங்படுகின்றது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தரம் உயர்த்தப்பட்டு இன்றைய தினம் திறக்கப்படவுள்ள நிலமையில் விமான நிலையத்தில் வரி விலக்கு விற்பனை நிலையங்கள் , சர்வதேச பொருள் விற்பனைக் கூடங்களுடன் நாணய மாற்று நிலையம், உணவகம் எனப் பல விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படக்கூடும்.
இவ்வாறு குறித்த விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படும. சமயம் வர்த்தகர்களை மேலும் வளர்த்து விடும் செயல்பாடுகளோ அல்லது அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் அன்றி விமான நிலையத்துடன் கூடிய நிலங்களின் உரிமையாளர்களை இனம்கண்டு அவர்களிற்கே இச் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். மாறாக தென்பகுதியினரிற்கோ அல்லது செல்வாக்கு மிக்கவர்களிற்கோ வழங்குவதற்கான முயற்சிகள் இடம்பெறாது காணி உரிமையாளர்களான தமக்கு வரங்கப்பட வேண்டும் என விமான நிலையத்தை சூழவுள்ள நில உரிமையாளர்கள் ஓர் நியாயமான கோரிக்கையினை கடந்த ஒக்டோபர் மாதம் முன் வைத்தனர்.
குறித்த விடயம்தொடர்பில் தமது நிலங்களை விடுவிப்பதனை தாம் விரும்பவில்லை என்றும் குறிப்பாக தாம் இன்றும் வீடு வாசல் இன்றி வாடகை வீடுகளில் அலையும் நேரம் படையினர் அப் பகுதியினை பாதுகாப்பு வலயம் என்னும் பெயரில் அபகரித்து வைத்துள்ள சமயம் குடாநாட்டின் சில பண முதலைகள் அல்லது செல்வாக்கின் அடிப்படையில் தமது நிலங்களில் விமான நிலைய கடைத் தொகுதி அமைக்க முயல்கின்றனர் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
எனவே இவை தொடர்பில் சிவில் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகார சபையின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டு பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அண்டிய பிரதேசத்தில் உள்ள நில உரிமையாளர்களை இனம் கண்டுகொள்வது இலகுவானதாக அமையும் அதன்பால் அந்த நில உரிமையாளர்களே வர்த்தக நிலையத் தொகுதியினை அமைப்பதற்கு விரும்பம்கொண்டால் அவர்களிற்கு அந்த சந்நர்ப்பம் வழங்கப்பட வேண்டும். எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.-