டெங்கு நோய்த் தாக்கத்திற்கு 2018 ஆம் ஆண்டு முழுவதும் 2 ஆயிரத்து 120 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டில் இதுவரை 3 ஆயிரத்து 349 பேர் இ...
டெங்கு நோய்த் தாக்கத்திற்கு 2018 ஆம் ஆண்டு முழுவதும் 2 ஆயிரத்து 120 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டில் இதுவரை 3 ஆயிரத்து 349 பேர் இனம் கானப்பட்டுள்ளதோடு மூவர் உயிரிழந்துள்ளமைபெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்துயசாலைப் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
குடாநாட்டில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதன் காரணமாக நுளம்பு பெருக்கமும் அதிகமாகவே கானப்படுகின்றது. இதன்போது டெங்கு நுளம்புகளும் அதிகரிக்கின்றன. இதன் காரணமாக தற்போது டெங்கு தொற்று சடுதியாக அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாக ஆண்டின் நவம்பர் , டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் டெங்கு நோயாளர் தொகை அதிகரிப்பது வழமையானது இருப்பினும் இந்த ஆண்டு அது மேலும் உச்சமாகவே உள்ளது.
இவற்றின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 264 பேர் இனம் கானப்பட்டதோடு டிசெம்பர் மாதம் 602 பேர் இனம் கானப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டும் ஆயிரத்து 549 பேர் இனம் கானப்பட்டுள்ளதனால் டிசம்பர் மாதம் இத் தொகை மேலும் அதிகருக்குமா என்ற அச்சமும் உள்ளது. டிசம்பர் மாத்த்தின் முதல் இரு நாட்களில் மட்டும் 84பேர் இனம் கானப்பட்டுள்ளனர்.
இவ்வாறு டெங்கு நோய் அதிகரித்துள்ள நிலமைநில் பாதிக்கப்படும் நோயாளர்கள் அதிகமாக யாழ்ப்பாணம் , கோப்பாய் , உடுவில் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்கு உட்பட்டவர்களாகவும் ஏனைய பிரிவுகளில் ஒரு சிலவும் கானப்படுகின்றன. டெங்கை கட்டுப்படுத்துவதற்கு புகை விசுறுதலோ அல்லது வந்தபின் காப்பதோ ஒரு நடவடிக்கை எனில் வர முன் காப்பதே சிறந்தது.
இதற்காக மிக மிக முக்கியமாக சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதும் கழிவுகளை தேங்காது பார்ப்பதோடு வளவுகளில் நீர் தேங்காது பாதுகாப்பதும் இன்றியமையாத விடயங்களாகும். இதேநேரம் 2019ல் மூவர் உயிரிழந்துள்ளனர். என்றார். -