நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சில தினங்களை ஜனாதிபதியிடம் பரிந்துரைத்துள்ளார் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய. ஏப்ரல...
நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சில தினங்களை ஜனாதிபதியிடம் பரிந்துரைத்துள்ளார் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய. ஏப்ரல் பிற்பகுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் தேர்தல்களை நடத்த பொருத்தமான 3 திகதிகளை அவர் பரிந்துரைத்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதிக்கு அவர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி இந்திய பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரை சந்தித்து பேசியிருந்தார். இதன்போது, பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதிகளை பரிந்துரைக்கும்படி ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன்படி, ஏப்ரல் பிற்பகுதி அல்லது மே ஆரம்பத்தில் தேர்தலை நடத்தலாமென மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 25, மே 9 மற்றும் 16 ஆகிய திகதிகளில் தேர்தலை நடத்தலாமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் பரிந்துரைத்துள்ளார். மே தினத்திற்கு மறுநாள் என்பதால் 2ம் திகதியை பரிந்துரைக்கவில்லையென தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின்படி, மார்ச் 2ம் திகதி அல்லது அதற்கு பின்னரே நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி பெறுகிறார். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தை கலைக்கலாமென்ற போதும், நாடாளுமன்றத்திலுள்ள இளம் உறுப்பினர்கள் அதை விரும்பவில்லை.
மார்ச் 2ம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்தால், அதன்பின்னர் 55 நாட்களின் பின்னரே தேர்தலை நடத்த முடியும்.