சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட ‘வெள்ளை வான்’ கடத்தல் மற்றும் படுகொலைகள் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு முன்னாள் சுகாதார அம...
சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட ‘வெள்ளை வான்’ கடத்தல் மற்றும் படுகொலைகள் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தினவின் கோரிக்கையின்படியே நடத்தப்பட்டது என்று கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் வாக்குமூலமளித்துள்ளனர் என்று குற்றவியல் விசாரணைத் திணைக்களம் (சிஐடி) நீதிமன்றத்தில் தெரிவித்தது.
புதன்கிழமை கொழும்பு நீதிவான் மன்றில் அறிக்கை தாக்கல் செய்த அதிகாரிகள், அதே செய்தியாளர் சந்திப்பில் தம்மைச் சாரதிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட இருவரில் ஒருவர் தெரிவித்த, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குச் சொந்தமான தங்கம் மற்றும் வெளிநாட்டுப் பணம் என்பவற்றைக் கொழும்புக்கு எடுத்து வந்தேன் என்று கூறியதும் முன்னாள் அமைச்சர் ராஜிதவின் சொற்படிதான் என்பதையும் சந்தேநபர்கள் ஏற்றுள்ளனர் என்றும் அறிவித்தனர்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பை நடத்துவதற்காகச் சந்தேநபர்கள் 30 லட்சம் ரூபாய் கேட்டனர். ஆனால் முன்னாள் அமைச்சரினால் இரு வீடுகள் மற்றும் அமெரிக்க, பிரிட்டன் தூதரகங்களில் வேலை ஆகிய சலுகைகளும் வழங்க இணங்கப்பட்டதை அடுத்து இந்தப் பேரம் 20 லட்சம் ரூபாவுக்கு முடிக்கப்பட்டது என்றும் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
செய்தியாளர் சந்திப்பில் தாம் கூறியவை அனைத்தும் முன்னாள் அமைச்சர் ராஜத சேனாரத்ன எழுத்தித் தந்தவைகளே என்றும் அவற்றில் உண்மை ஏதுமில்லை என்றும் சந்தேகநபர்களின் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு 6 நாள்கள் முன்பாக கார்த்திகை (நவம்பர்) 10ஆம் நாள் அமைச்சர் ராஜிதவுக்குச் சொந்தமான ஜனநாயக தேசிய இயக்கத்தின் கொழும்பு அலுவலகத்தில் திடீரென நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரால் ‘வெள்ளை வான்’ சாரதிகள் என்று அறிமுகப்படுத்தப்பட்ட இருவர் மகிந்த ராஜபக்ச ஆட்சியின்போது நடந்ததாகக் கடத்தல்கள், கொலைகள் குறித்துச் சாட்சியமளித்தனர்.
‘வெள்ளை வான்’ கடத்தல்கள் மற்றும் கொலைகள் என்பன அப்போதைய பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவுப்படியே நடந்தன.
தரைப் படையின் பிரிகேடியர் மற்றும் மேஜர் தர அதிகாரிகளின் நெறிப்படுத்தலில் இவை நிகழ்ந்தன என்று அவர்கள் அந்தச் சந்திப்பில் தெரிவித்திருந்தனர்.