இரணைதீவில் வருடாந்தம் 3 கோடி வருமானம் வரும் பாரிய கடலட்டை கிராமம்..

இரணைதீவில் வருடாந்தம் 3 கோடி வருமானம் வரும் பாரிய கடலட்டை கிராமம்..

இரணைதீவில் கடலட்டை கிராமம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு கடற்றொழில் நீரக வள மூலங்கள் அ...

இரணைதீவில் கடலட்டை கிராமம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

இரணைதீவை அண்டிய கடல் பிரதேசத்தில சுமார் 60 ஹெக்ரெயர் விஸ்தீரமான கடலட்டை வளர்ப்பிற்கு பொருத்தமான சூழல் இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்றியப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவுறுத்தலை துறைசார் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மக்கள் அண்மையில் இரணைதீவில் மீளக் குடியேறியிருந்தனர். எனினும், கடற்றொழில் நம்பி வாழுகின்ற இரணைதீவு மக்களின் புனர்வாழ்வுக்கு கடந்த அரசாங்கத்தினால் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் குறித்த மக்களின் பிரச்சினைகள் கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து, இரணைதீவு கடல் பிரதேசத்தின் சூழலியல் தன்மைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு, அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி, கடல் நீர்வாழ் உயிரின வளர்ப்பு, கடல் உயிரியல் கடற்படுக்கை மற்றும் சூழலியல் ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் நேரடியாக இரணைதீவு பிரதேசத்திற்கு விஜயம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டதன் அடிப்படையில் கடல் வளர்ப்புக்கு உகந்த பிரதேசம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் கடலட்டை கிராமம் உருவாக்க்படும் பட்சத்தில் இணைதீவில் மீளக் குடியேறியிருக்கும் மக்களின் மக்களின் வாழ்வாதாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் .

குறிப்பாக அடையாளப்படுத்தப்பட்ட குறித்த பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள கடலட்டை கிராமத்தின் மூலம் 350க்கும் மேற்பட்ட இரணைதீவு மக்கள் வேலை வாய்ப்பை பெற்றுககொள்வதோடு வருடாந்தம் சுமார் 3 கோடி ரூபாய் வருமானத்தையும் ஈட்டிக் கொள்ள முடியும் என்று துறைசார் நிபுணர்களினால் மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,397,Jaffna,3402,lanka,8704,medical,7,Medicial,39,sports,367,swiss,15,technology,79,Trending,4266,Videos,10,World,587,Yarlexpress,4275,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: இரணைதீவில் வருடாந்தம் 3 கோடி வருமானம் வரும் பாரிய கடலட்டை கிராமம்..
இரணைதீவில் வருடாந்தம் 3 கோடி வருமானம் வரும் பாரிய கடலட்டை கிராமம்..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgergvCW0k_t2pK7ux-DIXIJAstoyd9o5Qs1PLQoG3p62sH5VMvbAmsd5N74xMUk457TUShK3d_fu35OgBZupYM1HZQ8V5XRLhR4uwKjlvKYgTVktmHgo1ldwH7rs4oP775r2D03BW9HTg/s640/kadaladai.JPG
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgergvCW0k_t2pK7ux-DIXIJAstoyd9o5Qs1PLQoG3p62sH5VMvbAmsd5N74xMUk457TUShK3d_fu35OgBZupYM1HZQ8V5XRLhR4uwKjlvKYgTVktmHgo1ldwH7rs4oP775r2D03BW9HTg/s72-c/kadaladai.JPG
Yarl Express
https://www.yarlexpress.com/2019/12/3_19.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2019/12/3_19.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content