இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 18ம் திகதி நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் மூத்த த...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 18ம் திகதி நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடமாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
பாராதியாரின் ஐனன தின நிகழ்வில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார்.
தமிழரசுக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழாவை வடக்கு கிழக்கில் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கிழக்கில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் காரணமாக அங்கு அந்த நிகழ்வை பெரிய அளவில் இல்லாமல் சுருக்கமாகச் செய்ய இருக்கிறோம்.
அதேநேரத்தில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 18ம் திகதி நல்லூர் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகிலுள்ள நல்லூர் இளஞ்கலைஞர் மன்றத்தில் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இந் நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்றார்.