வடக்கில் மணற்கொள்ளை பெரும் வேகம்; மணல்வளத்துக்குப் பற்றாக்குறை:சுற்றுச்சூழலுக்கும் பேராபத்து - ஐங்கரநேசன்

வடக்கில் மணற்கொள்ளை பெரும் வேகம்; மணல்வளத்துக்குப் பற்றாக்குறை:சுற்றுச்சூழலுக்கும் பேராபத்து - ஐங்கரநேசன்

மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்குரிய வழித்தட அனுமதியைப் புதிய அரசாங்கம் நீக்கியுள்ளதால் வடக்கில் மணற்கொள்ளை பெரும் வேகம் எடுத்துள்ளது. இவ்...

மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்குரிய வழித்தட அனுமதியைப் புதிய அரசாங்கம் நீக்கியுள்ளதால் வடக்கில் மணற்கொள்ளை பெரும் வேகம் எடுத்துள்ளது. இவ்வாறு கட்டுப்பாடற்ற முறையில் மணல் வளம் சுரண்டப்படுவதால் விரைவில் மணல்வளத்துக்குப் பற்றாக்குறைவு ஏற்படவுள்ளதோடு, வடக்கின் சுற்றுச்சூழலுக்கும் பேராபத்து நிகழவுள்ளது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அவசியமாக இருந்த வழித்தட அனுமதியை அரசாங்கம் அண்மையில் நீக்கியுள்ளது. இது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்குரிய வழித்தட அனுமதியைப் புதிய அரசாங்கம் நீக்கியுள்ளதால் வடக்கில் மணற்கொள்ளை பெரும் வேகம் எடுத்துள்ளது. இவ்வாறு கட்டுப்பாடற்ற முறையில் மணல் வளம் சுரண்டப்படுவதால் விரைவில் மணல் வளத்துக்குப் பற்றாக்குறைவு ஏற்படவுள்ளதோடு, வடக்கின் சுற்றுச்சூழலுக்கும் பேராபத்து நிகழவுள்ளது.

மணல் வளம் கட்டுமானத்துக்கும் அபிவிருத்திக்குமான வளம் மாத்திரம் அல்ல. கரையோர மணற்குன்றுகள் கடல் நீர் உட்புகுவதைத் தடுக்கும் அரண்களாகப் பயன்படுவதோடு, நிலத்தடி நீர் மட்டத்தின் அளவிலும் பாரிய செல்வாக்குச் செலுத்தி வருகின்றது. நிலத்தின் அடியில் கடல் நீரில் மிதந்து கொண்டிருக்கும் நன்னீர் வில்லையின் தடிப்பை மணற் குன்றுகளின் உயரமே தீர்மானிக்கின்றது. மணற் குன்றுகளின் உயரம் குறையக் குறைய நிலத்தின் கீழே நன்னீர் வில்லையின் தடிப்புக் குறைந்து, அவ்விடத்தைக் கடல்நீர் ஆக்கிரமிக்கின்றது. மண்கும்பான் என்ற நன்னீர் கிராமம் இன்று குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு ஆளாகியிருப்பதன் பின்னணி இதுதான்.



இதற்கு முன்னரும் சட்ட விரோத மணல் அகழ்வு இடம் பெற்றிருந்தாலும், அதனை ஏற்றிச் செல்வதற்கான வழித்தட அனுமதி மணற்கொள்ளையை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்தி வைத்திருந்தது.

தற்போது வழித்தட அனுமதி தேவையற்றதாக்கப்பட்டு காவல்துறையின் சோதனைக் கெடுபிடிகள் இல்லை என்றதும் சட்டவிரோத மணல் அகழ்வு விஸ்வரூபம் பெற்றுள்ளது. இது மண்கும்பானில் மணல் ஏற்றிய உழவூர்திக்குத் தீவைக்கும் அளவிற்கு கடலோரக் கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அபிவிருத்தியில் ஏற்படும் தாமதங்களையோ அல்லது வேறு காரணங்களையோ அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் வழித்தட அனுமதியைத் தேவையற்றதாக்கும் முடிவை எடுத்திருக்கலாம். இம் முடிவு தென் இலங்கையின் சுற்றுச் சூழலுக்கு ஏற்புடையதாகவும் இருக்கலாம். ஆனால், நிலத்தடி நீரை உயிர் ஆதாரமாகக் கொண்ட வடக்கின் சுற்றுச் சூழலுக்கும், வடக்கின் நிலைத்த அபிவிருத்திற்கும் இம் முடிவு எவ்வகையிலும் பொருத்தம் அற்றதாகும்.

நடைமுறையில் இருக்கும் மணல் அகழ்வுக்கான அனுமதியினால் மட்டும் மணற் கொள்ளையையோ, அதன் காரணமாக ஏற்படவுள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைகளையோ ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. இதனைக் கருத்திற் கொண்டு, பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வழித்தட அனுமதி நீக்கத்தினால் வடக்குக்கு ஏற்படவுள்ள பாதிப்புகளை அரசுக்கு எடுத்து சொல்லி மீளவும் அதனை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு உடனடியாக ஆவன செய்ய வேண்டும்- என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,113,Astrology,30,cinema,270,doctor,13,Gallery,132,india,431,Jaffna,3858,lanka,9423,medical,7,Medicial,39,sports,418,swiss,15,technology,84,Trending,4619,Videos,10,World,670,Yarlexpress,4355,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: வடக்கில் மணற்கொள்ளை பெரும் வேகம்; மணல்வளத்துக்குப் பற்றாக்குறை:சுற்றுச்சூழலுக்கும் பேராபத்து - ஐங்கரநேசன்
வடக்கில் மணற்கொள்ளை பெரும் வேகம்; மணல்வளத்துக்குப் பற்றாக்குறை:சுற்றுச்சூழலுக்கும் பேராபத்து - ஐங்கரநேசன்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4jFx7LiJgOwTNxdbAok1EqcRiq21A1JzNj6BsAu5nVccZJ1NlYZPLji_M_t-EzMml2ejZGaUOIFK4y_PwNmM10y-7FHfVY0omD_a_watiu50U47rr2hi3Dg_FxAtkWls1yrGJW1C49JI/s320/aiyara.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4jFx7LiJgOwTNxdbAok1EqcRiq21A1JzNj6BsAu5nVccZJ1NlYZPLji_M_t-EzMml2ejZGaUOIFK4y_PwNmM10y-7FHfVY0omD_a_watiu50U47rr2hi3Dg_FxAtkWls1yrGJW1C49JI/s72-c/aiyara.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2019/12/blog-post_222.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2019/12/blog-post_222.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content