யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மறவண்புலவு பகுதியில் பொது மக்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையில் காற்றாலை மின் உற்பத்...
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மறவண்புலவு பகுதியில் பொது மக்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு அப் பகுதி மக்கள் ஒன்றிணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கொடிகாமம் பஸ் நிலையத்திலிருந்து ஏ9 வீதி வழியாக பேரணியாகச் சென்று சாவகச்சேரி பிரதேச சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று புதன்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் சந்தித்துக் கலந்துரையாடியிரந்தார். இதன் போது இந்தக் காற்றாலை அமைக்கும் திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்குப் பதிலளித்த தவிசளார் இந்தத் திட்டம் அமைப்பது தொடர்பில் பிரதேச சபைக்கு தெரியப்படுத்தவில்லை என்றும் சபையின் அனுமதியில்லாமலேயே இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் மக்களிடம் கூறியிருந்தார்.
பிரதேச சபைத் தவிசாளர் வழங்கிய உறுதிமொழிகளையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டவர்கள் கலைந்து சென்றிருந்தனர். அதே நேரம் இக் காற்றாலை அமைக்கும் திட்டத்தால் தமக்கு பல்வெறு பாதிப்புக்கள் ஏற்படுவதாகவுமு; இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் கோரிய மக்கள் இல்லையேல் தொடர்ந்தும் தாம் போராட்டங்களை முன்னெடுக்கப் வேண்டி ஏற்படுமென்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.