ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால பயணத்திற்கு மகா சங்கத்தினரின் பங்களிப்பு மிக அவசியம் என அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்து...
ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால பயணத்திற்கு மகா சங்கத்தினரின் பங்களிப்பு மிக அவசியம் என அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற குருணாகல் மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ´கடுமையாக பணியாற்றினால் சிறந்த பெறுபேறுகளை பெற முடியும் என கூறினார்.
எதிர்க்கட்சியில் உள்ள மற்றைய கட்சி உறுப்பினர்களுடன் சுமூகமாக பணியாற்றினால் எதிர்வரும் தேர்தலில் 110 க்கும் அதிகமான உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
சிலர் இன்று சோர்வடைந்துள்ளதாக தெரிவித்த அவர் கீழ் மட்டத்திற்கு சென்று பணியாற்ற வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் கூறினார்.
அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றிவதன் மூலம் நன்மைகளை பெற முடியும் எனவும் அப்படி செயற்படாவிடின் பிரதிபலன்களை பெற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
சில தொகுதி அமைப்பாளர்களுக்கு இன்னும் கிராமங்களுக்கு செல்ல முடியவில்லையாயின் வேறு நபர்களுக்கு அவர்கள் அந்த சந்தர்பத்தை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
அவர்கள் கிராமங்களில் உள்ள விஹாரைகளுக்கும் தேவாலயங்களுக்கும் சென்று மக்களை சந்திப்பது அவசியம் எனவும் அவர் கூறினார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இருந்தாக தெரிவித்த அவர், உடனடியாக குறைப்பாடுகளை நிவர்த்தி செய்துக்கொண்டு அடுத்த தேர்தலுக்கு தயாராக வேண்டும் என கூறினார்.
தேரர்களினதும் இளைஞர்களினதும் பங்களிப்பு இல்லாது இந்த பயணத்தை தொடரமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
´இந்த பதவியில் நான் தொடர்ந்தும் இருக்கமாட்டேன் அவ்வாறு இருப்பதும் எனது விரும்பம் அல்ல´ என தெரிவித்த ரணில் விக்ரமசிங்க எதிர்கால பயணத்திற்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் எனவும் கூறினார்.