யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான மருத்துவ அறிக்கை பெறுவதில் உள்ள நெருக்கடிகளை தீர்க்க நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான மருத்துவ அறிக்கை பெறுவதில் உள்ள நெருக்கடிகளை தீர்க்க நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் துரித நடவடிக்கை முன்னெடுத்துள்ளார்.

மருத்துவ சான்றிதழ் வழங்கும் இடத்திற்கு இன்று காலை சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன், அங்கு நிலமைகளை நேரில் அவதானித்ததுடன், மருத்துவ சான்றிதழ் வழங்குவதை சுலபமாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,
இதுவரை காலமும் மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு பலர் பல நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர். அது குறித்து எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதனடிப்படையில் இன்று காலை மருத்துவ சான்றிதழ் வழங்கும் இடத்திற்கு சென்று நிலமைகளை ஆராய்ந்துள்ளேன்.
என்னுடன் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இன்று மாலை மருத்துவ சான்றிதழ் வழங்கும் பரீட்சார்த்த நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம்.
இந்த நடவடிக்கையினை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு மேற்கொள்ளவுள்ளது.
இதனை தொடர்ந்து மருத்துவ சான்றிதழ் பெறுபவர்கள் வரிசையில் நிற்கவேண்டியதில்லை.
மருத்துவ சான்றிதழ் தேவையானவர்கள் அதற்கான விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம், அதில் திகதியிட்டு கொடுக்கப்படும் அந்த திகதியில் வந்து மருத்துவ சான்றிதழை பெறுவதற்கான சோதனைகளை மேற்கொண்டு குறுகிய நேரத்தில் மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்ள முடியும்.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான மருத்துவ அறிக்கையை வழங்குவதற்கு மருத்துவர்கள், ஆய்வுகூட உதவியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்களை புதிதாக நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளோம். இதன் மூலம் நடைமுறை மேலும் இலகுவாக்கப்படும் -என்றார்.