சிறுமி துன்புறுத்தல்; வல்வை அச்சகரின் விளக்கமறியல் நீடிப்பு...

சிறுமி துன்புறுத்தல்; வல்வை அச்சகரின் விளக்கமறியல் நீடிப்பு...

9 வயதுடைய நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆலய அர்ச்சகர் உள்ளிட...

9 வயதுடைய நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆலய அர்ச்சகர் உள்ளிட்ட இருவரது விளக்கமறியலும் வரும் 30ஆம் திகதிவரை நீடித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.



கடந்த நவம்பர் 27ஆம் திகதி  பாடசாலையில் சிறுமி அலைபேசி வைத்திருப்பதை ஆசிரியர் கண்டறிந்தார். இதுதொடர்பில் சிறுமியிடம் விசாரித்த போது, வல்வெட்டித்துறை ஆலயம் ஒன்றின் அர்ச்சகர் வாங்கி கொடுத்ததாகவும் அவர் அலைபேசி மூலம்  பிரசாதம் தர கூப்பிடுவதாகவும் சிறுமி கூறியுள்ளார்.

சிறுமியின் தகவலில் சந்தேகம் கொண்ட ஆசிரியர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அறிவித்தார். அவர்  பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து  உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அர்ச்சகர் தன்னை ஆலய மடப்பள்ளியில் வைத்து துன்புறுத்தலுக்குள்ளாகியதாகவும் தனக்கு அதிகளவான பணத்தை அவர் தந்ததாகவும் சிறுமி விசாரணையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தனது சித்தப்பா ஒருவரும் இவ்வாறு தன்னை துன்புறுத்துவதாகவும் சிறுமி தெரிவித்திருந்தார்.

அத்துடன், அர்ச்சகரால் வழங்கப்பட்ட பணம் ஒருதொகையையும் சிறுமி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சிறுமியின்  அலைபேசி சிம் அட்டை அர்ச்சகரின் பெயரிலேயே இருந்துள்ளது.

இந்த நிலையில் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில்  72 வயது அர்ச்சகரும் சிறுமியின் சித்தப்பாவான 50 வயதுடைய குடும்பத்தலைவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் கடந்த 30ஆம் திகதி முற்படுத்தப்பட்டனர்.

அன்றிலிருந்து சந்தேகநபர்கள் இருவரும் இன்று (டிசெ.20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்



இந்த வழக்கு பருத்தித்துறை நீதிமன்றில் பதில் நீதிவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தாவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் நலன்சார்பில் சட்டத்தரணி கே.சுகாஷும் முன்னிலையானார்கள்.

சிறுமியின் வாக்குமூலமும் அவரது சட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையும் மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.

முதலாவது சந்தேகநபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா, பிணை விண்ணப்பம் செய்ய மன்றின் அனுமதி கேட்டார். சிறுமியின் நலன்சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.சுகாஷும் தனது ஆட்சேபனையை முன்வைக்க மன்றின் அனுமதியைக் கோரினார்.



சட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை மன்றுக்கு கிடைக்காத்தால் பிணை விண்ணப்பத்தை நிரந்தர நீதிவான் முன்னிலையில் முன்வைக்க அறிவுறுத்திய பதில் நீதிவான், சந்தேகநபர்களின் விளக்கமறியலை வரும் 30ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,254,doctor,13,Gallery,129,india,385,Jaffna,3293,lanka,8588,medical,7,Medicial,39,sports,326,swiss,15,technology,79,Trending,4201,Videos,10,World,574,Yarlexpress,4268,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: சிறுமி துன்புறுத்தல்; வல்வை அச்சகரின் விளக்கமறியல் நீடிப்பு...
சிறுமி துன்புறுத்தல்; வல்வை அச்சகரின் விளக்கமறியல் நீடிப்பு...
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBPOXVigftCh__3jnAt2p8oE4zNtlJ5XPaW-REORTY-oPo2AwVf6igDX0oc_PRJbMorprAQflz6VHDwGpxBxdvT02Qll-xGeyBF3V9h4tL7GIhhAOipIlAx59eaOfMTLwk5vd6dAtKsec/s640/%25E0%25AE%25AA%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AF%2588+%25E0%25AE%25A8%25E0%25AF%2580%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%25A8%25E0%25AF%2580%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBPOXVigftCh__3jnAt2p8oE4zNtlJ5XPaW-REORTY-oPo2AwVf6igDX0oc_PRJbMorprAQflz6VHDwGpxBxdvT02Qll-xGeyBF3V9h4tL7GIhhAOipIlAx59eaOfMTLwk5vd6dAtKsec/s72-c/%25E0%25AE%25AA%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AF%2588+%25E0%25AE%25A8%25E0%25AF%2580%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%25A8%25E0%25AF%2580%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2019/12/blog-post_634.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2019/12/blog-post_634.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content