அதிகார பரவலாக்கலை அடியோடு நிராகரித்த கோட்டாபயவின் அரசில் அமைச்சர் பதவி வகிப்பதை டக்ளஸ் தேவானந்தா மீள்பரிசீலனை செய்ய வேண்டும். அதிகார பரவலாக்...
அதிகார பரவலாக்கலை அடியோடு நிராகரித்த கோட்டாபயவின் அரசில் அமைச்சர் பதவி வகிப்பதை டக்ளஸ் தேவானந்தா மீள்பரிசீலனை செய்ய வேண்டும். அதிகார பரவலாக்கம் சாத்தியமில்லையென கோட்டா சென்னதன் பின்னர், அவரை ஆதரிக்கும் தமிழ் தரப்பினர் தமது முகத்தை எங்கே கொண்டு சென்று வைக்கப் போகிறார்கள் என தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.
இன்று யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அவருக்கு ஆதரவாக செயற்படும் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் எங்கே தமது முகத்தை வைத்திருக்கிறார்கள் என்றுதுான் தேடிப்பார்க்க வேண்டும். அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் டக்ளஸ் தேவானந்தா, தன்னுடைய கட்சியின் கொள்ளை சமஷ்டி அடிப்படையிலானது என சொல்லி வருகிறார். அரசாங்கத்தின், அமைச்சரவையின் தலைவரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சமஷ்டி, அதிகார பரவலாக்கலை புறக்கணித்து விட்டார்.
தமிழ் தலைவர்கள் இதை தொடர்ச்சியாக சொல்லி வருவது தேவையற்ற ஒன்று. நடைமுறைச் சாத்தியமற்றது. இது செயற்படுத்தப்பட முடியாது என்பதை திட்டவட்டமாக சொல்லி விட்டார்.
அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் டக்ளஸ் தனது பதவியில் நீடிப்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்“ என்றார்.