நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் 94 பேரையும் விடுவித்து உதவ வேண்டும் என ஜனாதிபதி கோட்டபாய ராயபக்சாவிற்கு தமிழ்ந் தேசியக் ...
நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் 94 பேரையும் விடுவித்து உதவ வேண்டும் என ஜனாதிபதி கோட்டபாய ராயபக்சாவிற்கு தமிழ்ந் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டங்களில் ஏதோ ஒரு வகையில் துணை புரிந்தனர் என்ற அடிப்படையில் அவசர காலச் சட்டத்தின் கீழ் தற்போதும் தடுத்து வைத்திருக்கும் 94 அரசியல் கைதிகளையும் விடுவித்து உதவ வேண்டும்.
இவ்வாறு சிறையில் வாடும் கைதிகளில் பலருக்கு வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் பலருக்கு தீர்ப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறையில் வாடும் குறித்த தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பில் தேவைப்படின் நேரில் சந்தித்து கலந்துரையாடவும் தயாராகவுள்ளேன்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக தாங்கள் இருந்த காலத்தில் இவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இவர்களின் விடயமும் தாங்கள் அறிவீர்கள் எனவும் நம்புகின்றேன். என குறித்த கடித்த்தில் கோரியுள்ளார்.-