பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை நடந்தது என்ன ? சி.சிறிதரன் கவலை ..

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை நடந்தது என்ன ? சி.சிறிதரன் கவலை ..

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை என்னும் பெயரில் கொழும்பில் இயஙகும் தொழிற்சாலையை பரந்தனிற்கே கொண்டுவருவதாக உறுதிமொழி வழங்கி இன்றுடன் ஒரு ஆண்டு நி...

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை என்னும் பெயரில் கொழும்பில் இயஙகும் தொழிற்சாலையை பரந்தனிற்கே கொண்டுவருவதாக உறுதிமொழி வழங்கி இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவுபெற்றபோதும் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதியின் வடக்கு கிழக்கிற்கான அபிவிருத்திச் செயலணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலமையில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது . இதன்போது வடக்கே இயங்கிய பாரிய தொழிற்சாலைகளில் ஒன்றான பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை நாட்டில் தற்போது இயங்குகின்றதா இல்லையா என்பதனை உரிய அமைச்சின் அதிகாரிகள் தெரியப் படுத்த வேண்டும். என ஜனாதிபதியை கோரிய சமயம் உரிய அமைச்சின் அதிகாரிகள் அது தொடர்பில் விளக்கவேண்டும் என ஜனாதிபதி கோரினார்.

பரந்தனில் இரசாயன தொழிற்சாலைக்கு 120 ஏக்கர் நிலம் உள்ளது. போரின் காரணமாக அழிவடைந்த நிலையில் புனரமைத்து இயக்க ஒழுங்கமைக்கப்படும் எனப் பதிலளித்தபோது குறித்த பெயரில் ஓர் தொழிற்சாலை அதாவது பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை என்னும் பெயரில் கொழும்பில் இயங்குகின்றது. அத் தொழிற்சாலையின் பெயரில் பல வாகனங்கள் ஓடித் திரிகின்றன. இத் தொழிற்சாலையில் பணியாற்றிய பலர் இன்றும் தொழில் இன்றி வீதியில் இருக்க அதன் பெயரில் தற்போது யாரோ பணியாற்றுகின்றனர். என்பதனை சுட்டிக்காட்டினேன்.

ஜனாதிபதி குறித்த பெயரில் கொழும்பில் தொழிற்சாலை இயங்குகின்றதா எனக் கோரியபோது அதிகாரிகளும் ஆம் எனப் பதிலளித்தனர். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அந்த தொழிற்சாலை எங்கேனும் இயங்குவது தொடர்பில் வரவேற்க வேண்டும். என்றார். . பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை எனில் அது பரந்தனில்தான் இயங்க வேண்டும். அல்லது கொழும்பில் இயங்குவதானால் அதனை கொழும்பு இரசாயனத் தொழிற்சாலை எனப் பெயர் மாற்றி இயங்க வேண்டும் . எனக் கோரியிருந்தேன்.

இதன்போதே பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை என்ற பெயரில் இயங்கும் தொழிற்சாலை உடனடியாக பரந்தனிற்கே கொண்டு செல்லப்பட வேண்டும். என முன்னாள் ஜனாதிபதி உத்தரவிட்டார். இவ்வாறு உத்தரவு பிறப்பித்து ஓர் ஆண்டு கடந்த நிலையிலும் எதுவித முன்னேற்றமும் இல்லை. அவ்வாறானால் ஜனாதிபதியின் உத்தரவும் காற்றில் பறக்க விடப்பட்ட நிலையில் அந்த தொழிற்சாலை வருமா இல்லையா என எழுப்பப்படும் கேள்விக்கு பதிலளிப்பர் யார் என்பதுகூட இன்று இந்த நாட்டில் கேள்விக்குறியாகவே உள்ளது. என்றார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,113,Astrology,30,cinema,270,doctor,13,Gallery,132,india,431,Jaffna,3858,lanka,9423,medical,7,Medicial,39,sports,418,swiss,15,technology,84,Trending,4619,Videos,10,World,670,Yarlexpress,4355,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை நடந்தது என்ன ? சி.சிறிதரன் கவலை ..
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை நடந்தது என்ன ? சி.சிறிதரன் கவலை ..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkba80VIJIU5k0PkenOYxex16cf1VljA0vkP1Dj6hShJI46ETXzcOTEHRI8I0VTQYUmBaz6diDVZqaYbAKUvcCcalgTLOlQDwprDcoo7tA9MqR2ABuOkSwtM577edNlrA626zXrvDMrS4/s640/fgfgf.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkba80VIJIU5k0PkenOYxex16cf1VljA0vkP1Dj6hShJI46ETXzcOTEHRI8I0VTQYUmBaz6diDVZqaYbAKUvcCcalgTLOlQDwprDcoo7tA9MqR2ABuOkSwtM577edNlrA626zXrvDMrS4/s72-c/fgfgf.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2019/12/blog-post_722.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2019/12/blog-post_722.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content