யாழ். மாவட்டத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான மருத்துவச் சான்றிதழ் வங்கும் நடைமுறையில் மாற்றத்தை கடைப்பிடிக்க முடியாதா என ...
யாழ். மாவட்டத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான மருத்துவச் சான்றிதழ் வங்கும் நடைமுறையில் மாற்றத்தை கடைப்பிடிக்க முடியாதா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மாவட்டத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறவேண்டிய அனைவரும் மாவட்டச் செயலகத்திற்கு அண்மையிலுள்ள ஒரேயொரு இடத்திலேயே மருத்துவச் சான்றிதழ் பெறவேண்டியுள்ளது.
இதனால் பல்வேறு நெருக்கடிகள் எதிர்நோக்கப்படுகின்றன. அதிகாலை இரண்டு மணியளவிலேயே மக்கள் வருகைதந்து வரிசையில் நிற்கின்றனர்.
வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் உட்பட தூரப் பிரதேசங்களில் இருந்து வருகைதருவோர் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த விடயத்தில் யாழ். மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


