இலங்கையின் முதலாவது சுதந்திரதினத்தில் முதலில் தமிழில்தான் தேசிய கீதம் பாடப்பட்டது. இதை தெரியாதவர்கள்தான் இன்று கூச்சலிடுகிறார்கள். அதேநேரம்,...
இலங்கையின் முதலாவது சுதந்திரதினத்தில் முதலில் தமிழில்தான் தேசிய கீதம் பாடப்பட்டது. இதை தெரியாதவர்கள்தான் இன்று கூச்சலிடுகிறார்கள். அதேநேரம், தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதாலேயே தமிழ் மக்களின் உரிமைகள் கிடைத்து விடுமா என்பதையும் சிந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன்.
இன்று (1) யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1949ம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந்திரத்தின் போது, காலையில் முதலில் பாடியது தமிழில்தான். பின்னர் பிரதமரின் உரையின் பின்னரே சிங்களத்தில் பாடப்பட்டது. இந்த வரலாற்றை தெரியாதவர்கள்தான் இன்று கூச்சலிடுகிறார்கள்,
எந்த நாட்டில் இரண்டு மொழியில் தேசிய கீதம் பாடுகிறார்கள், இந்தியாவில் கூட ஒரு மொழியில்தான் தேசிய கீதம் பாடப்படுகிறது என ராஜபக்சக்கள் கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் ஒன்றை மறந்து விட்டனர். இந்தியாவில் 43 வீதமானவர்கள் இந்தி பேசுபவர்கள், வெறும் 8 வீதமானவர்கள் பேசும் வங்க மொழியிலேயே தேசிய கீதம் இயற்றப்பட்டு, பாடப்படுகிறது. இதை தெரியாமல் ராஜபக்சக்கள் புலம்புகிறார்கள்.

அதேவேளை, தேசிய கீதத்தை தமிழில் பாடப்படுவதன் மூலம் தமிழ் மக்களிற்கு எதுவும் கிடைக்காது, தேசிய கீதத்தை தமிழில் பாடப்படுவதன் மூலம் தமிழ் மக்களிற்கான உரிமைகளோ, வழங்க வேண்டிய சலுகைகளோ கிடைக்குமாக இருந்தால் பாடப்படுவதில் தவறில்லை .
இந்த நாட்டில் இனவாத மதவாத வெறியை தூண்டி, ஆட்சியதிகாரத்தை கைப்பற்றவே அவர்கள் இந்த பிரச்சனையை தூண்டி விடுகிறார்கள். நாட்டை காப்பாற்ற வந்த துட்டகைமுனு என கூறிக்கொண்டு வந்த கோட்டாபய, முன்னைய அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் மாற்றி வருகிறது.
முன்னைய ஆட்சிக்கும், இப்போதைய அரசுக்குமிடையில் இரகசிய கொடுக்கல் வாங்கல்கள் உள்ளன. கைது செய்வது, ராஜபக்சவின் குடும்பத்தை பாதுகாக்க, வழக்கு தொடர வேண்டாமென கொடுக்கல் வாங்கல் இருந்தது.
45 நாள் ஆட்சியின் முடிவில், கோட்டாபய தரப்பு கூறிய எதுவும் நடக்காமல், அவர்களாகவே அவர்கள் ஆடைகளை களைந்து நிர்வாணமாக நிற்கும் நிலை உருவாகியுள்ளது.
முக்கியமானது அமெரிக்காவுடனான எம்.சி உடன்படிக்கையை எதிர்த்தார்கள். நாட்டிற்கு பேராபத்து, ஆட்சி பீடமேறியதும் கிழித்தெறிவோம் என கூறியவர்கள், இப்பொழுது ஆட்சிக்கு வந்ததும், அதை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
சங்கரில்லா ஹோட்டலக்கும் பெரவெவ வாவிக்குமிடையில் அமைந்துள்ள 3 ஏக்கர் காணியை 245 பில்லியன் அமெரிக்க டொலருக்கு சிங்கப்பூர் நிறுவனத்திற்கு தாரைவார்த்துள்ளனர். கடந்த ஐதேக அரசின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டபோது, நாட்டின் இதயத்தை விற்ப முயற்சிக்கிறார்கள் இது தேசத்துரோகம் என்றார்கள்.
தயவுசெய்து காணியை வாங்காதீர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதை மீளப்பெற நடவடிக்கையெடுப்போம் என்று சிங்கப்பூர் நிறுவனத்திற்கு சொன்னார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்ததும், அதே சிங்கப்பூர் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.
இன்று அரிசி விலை அதிகரித்துள்ளது. சதொச களஞ்சியத்திற்கு நேற்று முன்தினம் நாமல் கருணாரத்ன சென்ற போது, 150 இலட்சம் மெற்றிக்தொன் அரசி காலாவதியாகியிருந்தது தெரிய வந்தது. அந்த அரிசியை விலங்கிற்கு விற்பதாக சொன்னாலும், அது மீள சுத்திகரிக்கப்பட்டு மக்களிற்கு வழங்கப்படும் அபாயமுள்ளது, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசிலும் காலாவதியாகவுள்ளது.
நாட்டில் இப்படியான அத்தியாவசியமான பிரச்சனைகள் இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு நாரஹேன்பிட்டியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் காசுமேசையில் போயிருக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய. நாட்டு பிரச்சனையை விட்டுவிட்டு, அவர் முதலாளியாக இருக்கிறார் என்றார்.