நாட்டில் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதே எமது நோக்கம் என்றும் மாறாக அரசியல் பழிவாங்கலை செய்ய வேண்டிய அவசியம் தமக்கு இல்லை...
நாட்டில் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதே எமது நோக்கம் என்றும் மாறாக அரசியல் பழிவாங்கலை செய்ய வேண்டிய அவசியம் தமக்கு இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாசவின் மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் எந்தவித அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அவரது சொந்த மாவட்டத்திலேயே அபிவிருத்தி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் மோசடிகள் இடம்பெற்றுள்ளது என்றும் குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சொந்த மாவட்டமான பொலநறுவையில் எவ்வித அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் நாமல் ராஜபக்ஷ கூறினார். குறிப்பாக அந்த மாவட்டத்தில் இடம்பெற்ற அபிவிருத்திப் பணிகள் நூற்றுக்கு பூஜ்ஜியம் என்றும் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டினார்.
எனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் 100 நாள் அரசாங்கம் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ஷ தமது அரசாங்கம் 5 ஆண்டு திட்டங்களுடன் ஆட்சிக்கு வந்துள்ளதாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதே எதிர்கால இலக்கு என்றும் கூறினார்.
மேலும் ரஞ்சன் ராமநாயக்கவின் செயற்பாடுகளை நியப்படுத்த முற்படாமல் எமது திட்டங்களுக்கு ஆதரவினை வழங்குமாறும் நாமல் ராஜபக்ஷ எதிர்க்கட்சி உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.