அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் தனது ஆழ்ந்த கரிசனையை வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பாதிக்கப...
அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் தனது ஆழ்ந்த கரிசனையை வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பாதிக்கப்பட்டவர்களிற்காக இலங்கையிலிருந்து தேயிலையை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனுடன் இன்று (7) தொலைபேசியில் உரையாடியபோது, ஜனாதிபதி இதனை தெரிவித்தார் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தனது உரையாடலின் போது, தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார்.
2004 இல் சுனாமி மற்றும் இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் இலங்கையர்களால், அவுஸ்திரேலிய மக்கள் எதிர்கொள்ளும் துயரத்தை புரிந்து கொள்ள முடியும்.
அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 30 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன், மில்லியனிற்கும் அதிகமான விலங்குகள், தாவரங்கள் அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.