ஈராக்கின் ஹஷ்த் அல்-ஷாபி துணை இராணுவப் படைகளின் தளபதியைக் குறிவைத்து, அமெரிக்கா இன்று (4) வான்வழித் தாக்குதலை நடத்தியது இதில் 6 பேர் கொல்லப்...
ஈராக்கின் ஹஷ்த் அல்-ஷாபி துணை இராணுவப் படைகளின் தளபதியைக் குறிவைத்து, அமெரிக்கா இன்று (4) வான்வழித் தாக்குதலை நடத்தியது இதில் 6 பேர் கொல்லப்பட்டனர்
அமெரிக்காவின் ஆளில்லாத உளவு விமானம் இந்த தாக்குதலை நடத்தியது.
நேற்று அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் ஈரானிய ஜெனரல் காசீம் சொலைமணி கொல்லப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், இன்று மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது..
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் வடக்கே தாஜி வீதியில் இந்த தாக்குதல் நடந்ததாக ஈராக்கின் அரசு தொலைக்காட்சி கூறியது. ஆனால் இலக்கு வைக்கப்பட்ட நபரின் பெயரை குறிப்பிடவில்லை.
பொப்புலர் மொபிலைசேஷன் ஃபோர்ஸ் (பி.எம்.எஃப்) என்றும் அழைக்கப்படும் ஹஷ்த் அல்-ஷாபி, ஈரானின் ஆதரவுடன் இயங்கும் அமைப்பாகும்.
இந்த தாக்குதலில் மருத்துவர்கள் உட்பட குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.