அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கெதிரான ரி-20 தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க தென்னாபிரிக்க அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. குயிண்டன...
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கெதிரான ரி-20 தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க தென்னாபிரிக்க அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குயிண்டன் டி கொக் தலைமையிலான இந்த அணியில், அண்மையில் சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் இடம்பெறாத அனுபவ வீரர்களாக டு பிளெஸிஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கார்கிஸோ ரபாடா ஆகியோர் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.
இதுதவிர பந்துவீச்சாளர் என்ரிச் நோர்ட்ஜ் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். மேலும், இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் இடம்பெற்றிருந்த பியூரன் ஹென்ரிக்ஸ், ரீஸா ஹென்ரிக்ஸ் மற்றும் சிஸண்டா மகலா ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில் வலது தொடையில் காயமடைந்த டெம்பா பவுமா, அணியில் இடம்பிடித்துள்ளார். எனினும், அவர் உடற் தகுதியை பொறுத்தே அணியில் இடம்பிடிப்பார்.
சரி தற்போது அணியின் விபரத்தை பார்க்கலாம்,
குயிண்டன் டி கொக் தலைமையிலான அணியில், டெம்பா பவுமா, டு பிளெஸிஸ், ராஸ்ஸி வெண்டர் டஸன், டேவிட் மில்லர், பிஜோர்ன், டுவைன் பிரிடோரியஸ், என்டில் பெலுக்வாயோ, ஸ்மட்ஸ், கார்கிஸோ ரபாடா, டப்ரைஸ் சம்ஸி, லுங்கி இங்கிடி, ஜோர்ன் போர்சுன், என்ரிச் நோர்ட்ஜ், டேல் ஸ்டெயின், ஹெய்ரிச் கிளாசென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த மாத இறுதியில் தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்ரேலியா அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர்களில் விளையாடுகின்றது.
இதில் முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் நடைபெறுகின்றது. இதன் முதல் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி ஜோகனஸ்பெர்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.