மார்ச் 02ம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்பிரல் 25ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும் எனவே அதற்குரிய அனைத்மு ஏற்பாடுகளை...
மார்ச் 02ம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்பிரல் 25ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும் எனவே அதற்குரிய அனைத்மு ஏற்பாடுகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளிற்கு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரியா பணிப்புரை விடுத்தபோதும் அலுவலகர்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
இலங்கையின் அனைத்து மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள் , ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் ஆணைக்குழு உறுப்பினர்களிற்கான விசேட கூட்டம நேற்றைய தினம் ஆணைக்குழு அலுவலகத்தில் தவிசாளர் தலமைநில் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி பணிப்புரையை தவிசாளர் விடுத்தார்.
குறித்த அறிவிப்பின் பிரகாரம் கடும் வேலைப் பழு உள்ளது. குறிப்பாக இக் காலப்பகுதியில் அதிக ஊழியர்கள் விடுமுறையில் சென்று விடுவார்கள். ஏனெனில் இரு நாள் சொந்த விடுமுறைக்கு விண்ணப்பித்தால் தொடர்ச்சியாக 9 தினங்கள் விடுமுறை எடுக்கும் சந்தர்ப்பம் உள்ளது. இதே நேரம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிற்கு பணியாற்றிய கொடுப்பனவே இன்னும் அதிகமானோரிற்கு வழங்கவில்லை.
இதேநேரம் கடந்த ஆண்டு ஏப்பிரல் 21 குண்டு வெடிப்பு இடம்பெற்ற ஆண்டு நிறைவு வருகின்றது. இதனை பலரும் அரசியல் மயப்படுத்தக்கூடும் அல்லது அதனை சாதமாக்குவர். இக் காலப் பகுதியில் இதனால் ஓர் நெருக்கடி ஏற்படின் அதனை சீர் செய்யவும் சந்தர்ப்பம் போதாது ஏனெனில் 23ம் 24ம் திகதிகள் பிரச்சார நிறைவு தினங்களாக கானப்படுகின்றன.
இதேநேரம் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளிற்கும் போதிய கால அவகாசம் கிடையாது அதனால் மூடிந்தால் மே மாத்த்தின் முதல் வாரத்தில் நடாத்த கோர வேண்டும் எனப பலரும் வலியுறுத்தினர். இருந்தபோதும் குறித்த கோரிக்கை தொடர்பில் தெரியப்படுத்தலாம் என மட்டுமே பதிலளிக்கப்பட்டது.