உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா வைரஸ் தொற்றுநோயை “நம் காலத்தின் உலகளாவிய சுகாதார நெருக்கடி“ என வர்ணித்துள்ளது. “எல்லா நாடுகளுக்கும் எங்கள...
உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா வைரஸ் தொற்றுநோயை “நம் காலத்தின் உலகளாவிய சுகாதார நெருக்கடி“ என வர்ணித்துள்ளது.
“எல்லா நாடுகளுக்கும் எங்களிடம் ஒரு எளிய செய்தி உள்ளது. அது – சோதனை, சோதனை, சோதனை” என்று உலக சுகாதார அமைப்பு இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் திங்களன்று ஜெனீவாவில் ஒரு செய்தி மாநாட்டில் கூறினார்.
“அனைத்து நாடுகளும் சந்தேகிக்கப்படும் அனைவரையும் சோதிக்க முடியும். இந்த தொற்றுநோயை அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு போராட முடியாது.” என்றார்.
அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வைரஸை எதிர்த்துப் போராடும் முயற்சியாக பாடசாலைகள், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தவிர மற்ற அனைத்தையும் மூடியுள்ளன.
உலகளவில், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 168,000 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தது 6,610 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தென்கொரியா
தென்கொரியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 100 இற்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று 84 பேர் கொரோனா வைரஸ் தொற்றிற்கு இலக்காயிருந்தனர். பெப்ரவரி 29ம் திகதி 909 பேர் பாதிக்கப்பட்டதே அந்த நாட்டில் உச்சபட்ச பாதிப்பாக உள்ளது. தென்கொரிய அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கைகளின் பின்னர், கடந்த 2 நாட்களாக 100 இற்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தற்போது 8,320 பேர் அந்த நாட்டில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பதிவான 2 உயிரிழப்புடன் மொத்த உயிரிழப்பு 81 அக உயர்ந்துள்ளது.
இதேவேளை, சிகிச்சையின் பின் குணமடைந்த 264 நோயாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசில் சிறைகள் உடைப்பு
பிரேசிலின் சரோ பாலோ மாநில சிறையை உடைத்துக் கொண்டு கைதிகள் தப்பியோடியுள்ளனர். அந்த சிறையில் ஒரு கைதி கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, சிறைக்குள் கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டு, நேற்று திங்கட் கிழமை சிறையை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதை தொடர்ந்து அந்த மாநிலத்தின் மேலும் 3 சிறைகளையும் உடைத்துக் கொண்டு கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
தப்பியோடியவர்களின் எண்ணிக்கையை இன்னும் கணக்கிடப்படுவதால் எத்தனை கைதிகள் தப்பிவிட்டார்கள் என்று சொல்ல முடியாது என்று சிறைத்துறை தெரிவித்துள்ளது. மொங்காகு, ட்ரெம்பே, போர்டோ பெலிஸ் மற்றும் மிராண்டபோலிஸ் ஆகிய நான்கு சிறைகளிலிருந்து 1,000 பேர் வரை தப்பி ஓடிவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெனிசூலாவிலும் தனிமைப்படுத்தல்
நாடு தழுவிய தனிமைப்படுத்தலை வெனிசூலா பிரகடனம் செய்துள்ளது. நேற்று திங்கட் கிழமை அந்த நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ இதனை அறிவித்தார்.
நாட்டின் சில மாநிலங்களில் நடைமுறைப்படுத்திய தனிமைப்படுத்தல் திட்டம் வெற்றியளித்ததை தொடர்ந்து, இந்த அறவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெனிசூலாவில் கொரோனா தொற்றினால் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கியூபாவிலிருந்து மருந்து ஏற்றுமதி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சீனாவிலிருந்து சோதனை கருவிகளை நாடு பெறும் என்று மதுரோ மேலும் கூறினார். விவரங்களை வழங்காமல், குடிமக்களுக்கான சலுகைகளை அரசாங்கம் அறிவிக்கும் என்றும் அவர் கூறினார்.
எல்லைகளை மூடியது கொலம்பியா
நாட்டின் அனைத்து எல்லைகளையும் கொலம்பியா மூடியுள்ளது. மே மாதம் 30ம் திகதி வரை எல்லைகளை மூடியுள்ளது.
சீனாவிற்கு வெளிநாடுகளே இப்போது வில்லன்
சீனாவில் நேற்று வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21. வைரஸ் தோன்றிய மத்திய மாகாணமான ஹூபேயில் ஒருவர் பாதிக்கப்பட்டார். மிகுதி 20 பேரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
நேற்று முன்தினம் 16 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
சீனாவில் வைரஸ் தொற்றிற்கு இலக்காகியவர்களின் எண்ணிக்கை இப்போது 80,881 ஆக உள்ளது. 3,226 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று 19 உயிரிழப்புக்கள் பதிவாகின. இதில் 12 பேர் ஹூபேயில் உயிரிழந்தனர். அவர்களில் 11 பேர் மாகாண தலைநகர் வுஹானில் உயிரிழந்தனர்.