இன்றைய மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அனைத்து நாடுகளினதும் இருப்பு மற்றும் முன்...
இன்றைய மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அனைத்து நாடுகளினதும் இருப்பு மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்ய மிக முக்கிய காரணியாகத் திகழும் பெண்களின் பங்களிப்பை கௌரவத்துடன் நினைவு கூர்வதாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இலங்கைப் பெண்களின் சமூக அபிவிருத்திச் சுட்டெண், உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் தரத்தை அடைந்திருப்பதன் மூலம், பெண்களுக்கு நாடு வழங்கியுள்ள முக்கியத்துவம் புலனாவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
சமூகப் பங்களிப்பு மற்றும் ஆயுள் எதிர்பார்ப்பு போன்ற விடயங்களில் முன்னிற்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெண்களே அதிக பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வித வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளை தடுத்து, வருமானம் ஈட்டும் நடவடிக்கைக்கு பெண்களும் சரி சமமாக பங்களிக்கக் கூடிய சூழலை உருவாக்க தனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
அதே போன்று சுயமாக தீர்மானங்களை எடுக்கவும், அரச நிர்வாகத்தில் உயர் பதவிகளை வகிக்கவும், இலங்கைப் பெண்களுக்குள்ள உரிமைகளை அனைவரும் இணைந்த உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.