தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று முகப்புத்தகத்தில் எச்சரிக்கை விடுத்த நபர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்...
தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று முகப்புத்தகத்தில் எச்சரிக்கை விடுத்த நபர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பிரதமர் நேற்று (30) பிற்பகல் கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மல்வத்து மற்றும் அஸ்கிரிய, பீடங்களின் மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் இந்த விடயத்தை கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து விரைவாக விசாரணை நடத்தி ஒரிருவரை தண்டிப்பதை விட தாக்குதல் நடத்தப்பட்டதற்கான அடிப்படை நோக்கத்தை கண்டறிய வேண்டியது கட்டாயம் என பிரதமர் தெரிவித்தார்.
மேலும் கடந்த சில தினங்களில் முகப்புத்தகத்தில் ஒருவர் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் என பதிவிட்டிருந்தார். அதற்கமைய அவரை கைது செய்து விசாரித்து வருவதாகவும் பிரதமர் கூறினார்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலை எதிர்ப்பதன் நோக்கம் தனக்கு புரியவில்லை எனவும் இது தொடர்பில் மக்கள் உண்மையை அறிவார்கள் எனவும் பிரதமர் தெரிவித்தார்.