நாடு முழுவதும் பலத்த மழை பெய்யலாம். மக்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை.

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யலாம். மக்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து. இன்று (2020 மே 16ஆம் த...

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து.

இன்று (2020 மே 16ஆம் திகதி) முற்பகல் 05.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 670 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 10.40 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.00 E இற்கும் இடையில் மையம் கொண்டுள்ளது.

இது இன்று (16ஆம் திகதி) விரைவாக ஒரு சூறாவளியாக விருத்தியடைவதுடன் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு பாரிய சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அது ஆரம்பத்தில் 17ஆம் திகதி வரை வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் மே 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை வடக்கு – வடகிழக்கு திசையில் திரும்பி மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தென், மேல் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமானபலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில், குறிப்பாக ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பொத்துவிலிலிருந்து திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை காணப்படும். கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பு முதல் மிகவும் கொந்தளிப்பு வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,91,Astrology,27,cinema,184,doctor,10,Gallery,66,india,247,Jaffna,423,lanka,5838,Medicial,33,sports,154,swiss,14,technology,50,Trending,2899,Videos,7,World,289,Yarlexpress,3663,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,6,
ltr
item
Yarl Express: நாடு முழுவதும் பலத்த மழை பெய்யலாம். மக்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை.
நாடு முழுவதும் பலத்த மழை பெய்யலாம். மக்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை.
https://1.bp.blogspot.com/-yMF_PrQlqwg/Xr_mzJPZgtI/AAAAAAAAdVY/qIo4_oKqmM0zPduSme3m891FtJ45uYBfQCK4BGAsYHg/s320/IMG_20200516_183928.jpg
https://1.bp.blogspot.com/-yMF_PrQlqwg/Xr_mzJPZgtI/AAAAAAAAdVY/qIo4_oKqmM0zPduSme3m891FtJ45uYBfQCK4BGAsYHg/s72-c/IMG_20200516_183928.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/05/blog-post_242.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/05/blog-post_242.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content