எந்த இடர்காலத்திலும் முதலில் அதிகம் பாதிக்கப்படுவது உழைப்பாளர்களே. ..

எந்த இடர்காலத்திலும் முதலில் அதிகம் பாதிக்கப்படுவது உழைப்பாளர்களே. ..

எந்த இடர்காலத்திலும் முதலில் அதிகம் பாதிக்கப்படுவது உழைப்பாளர்களே. அவ்வாறே இந்தக் கொரோனா இடரிலும் உழைப்பாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. ...

எந்த இடர்காலத்திலும் முதலில் அதிகம் பாதிக்கப்படுவது உழைப்பாளர்களே. அவ்வாறே இந்தக் கொரோனா இடரிலும் உழைப்பாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே காப்பதோடு, அவர்களின் உரிமைகளையும் வலியுறுத்வோம் என சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மேதினம் நாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸ் தொற்று அபாயத்திலும் உயிரிழப்புகளின் நெருக்கடியிலும் உலகம் சுருண்டு போயிருக்கும் இந்த நாட்களில் அதிகமதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது தொழிலாள வர்க்கத்தினரேயாகும். இயல்பான சூழலிலேயே நாளாந்த வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்குப் பெரும் சிரமப்படும் தொழிலாளர்கள், சிறு விவசாயிகள், சிறு வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி, மற்றும் வாடகை வண்டி ஓட்டுனர்கள், சிகை அலங்கரிப்பாளர்கள், கடற்றொழிலாளர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், போராளிகளாகச் செயற்பட்டோர் மாற்றுவலுவுள்ளோர் எல்லாம் இப்பொழுது மிகமிகச் சிரமப்படுகின்றனர்.

எமது சூழலில் இவர்களுக்கான சிறிய அளவிலான உதவிகள் பல்வேறு தரப்பினரால் கிடைக்கப்பெற்றாலும் இந்த உதவிகள் இவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானவை அல்ல. இவர்களுடைய பொருளாதாரத்தை உயர்த்திப் பாதுகாப்பும் உத்தரவாதமும் உடையதொரு வாழ்க்கையை உருவாக்காத வரையில் இவர்களுடைய பிரச்சினை ஒரு போதுமே தீரப்போவதில்லை. மட்டுமல்ல, இந்த மாதிரி இடர் காலத்தின்போதெல்லாம் இவர்கள் பெரும் நெருக்கடியான நிலவரத்தைச் சந்திக்க வேண்டியவர்களாவும் உள்ளனர். அந்தளவுக்கு இவர்களுடைய நிலைமை பாரதூரமானதாக உள்ளது.

எனவேதான் இந்தப் பாதக நிலையை மாற்றவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மக்கள் போராடி வருகின்றனர். ஒவ்வொரு மேதினத்தின்போதும் சமத்துவக் கட்சியினராகிய நாமும் இதனையே வலியுறுத்தி வருகிறோம். இந்த மேதினத்தின்போதும் இதை நாம் அழுத்தமாக முன்வைத்துப் பேசுகிறோம். எமது அரசியல் முன்னெடுப்பில் நாம் தொழிலாளர்களின் நலன்களையே முதற்கவனமெடுத்துச் செயற்பட்டு வருகிறோம்.

முதலாளித்துவ நாடுகளிலேயே தொழில் இழப்போ வருமான இழப்போ நேருமிடத்து அந்தக் குடும்பங்களையும் அந்த மனிதர்களையும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்போது எமது நாட்டில் இன்னமும் உழைப்பாளர்கள் எந்த உத்தரவாதமும் இல்லாமல் நிர்க்கதியான வாழ்க்கையில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது வருத்தத்திற்குரியது. இந்த நிலைமையை நாம் அனைவரும் கூடி மாற்றியமைக்க வேண்டும் என எமது மேதினப் பிரகடனமாக இதை நாம் வெளிப்படுத்திக் கொள்கிறோம். கொரோனா தொற்றானது இந்த ஆண்டு மேதின எழுச்சியையும் கட்டுப்படுத்தியுள்ளது. ஆனாலும் எமது நெஞ்சத்து நினைவுகளில் மேதின எழுச்சியை, தொழிலாளர்களின் உணர்வுகளை, அவர்களுடைய பிரச்சினையை, அவர்களுடைய எதிர்காலத்தை நிறுத்திக் கொள்கிறோம்.

இந்த உலகம் உழைப்பாளர்களினால் ஆனது. அவர்கள் உருவாக்கிய உலகத்திலேயே எல்லோரும் வாழக்கூடியதாக உள்ளது. அப்படி வாழும் அனைவரும் இந்தத் தொழிலாள வர்க்கத்தை வாழ வைக்க முன் வர வேண்டும். இது ஒவ்வொருவருக்குமான பொறுப்பாகும்.

இப்போதைய சூழலில் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படும் ஊரடங்கினாலும் போக்குவரத்துத் தடை, தனிமைப்படுத்தல் நிலைமைகளினாலும் தொழிற்றுறை முடக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தொழில்முடக்கம், வருமான இழப்பு போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நாம் அனைவரும் கை கொடுத்து உதவ வேண்டும். இதை எமது வரலாற்றுக் கடமையாகவும் மேதினத்தின் பொறுப்புமிக்க பணியாகவும் மேற்கொள்வோம்.

அடுத்து வரும் நாட்கள் எப்படியிருக்கும் என்று திட்டமிட முடியாத அளவுக்கே உலக நிலைமை உள்ளது. இந்தச் சூழலிலும் தமது பொருளாதார நலன்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றன வல்லரசுகளும் உலக முதலாளித்துவ சக்திகளும். இவை தொழிலாள சமூகத்தைக் கவனத்திற் கொண்டு தமது தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்..

உழைப்பாளர்களே இந்த உலகத்தின் படைப்பாளர்கள். அவர்களை காப்பதும் போற்றுவதும் நம் கடமையாகும்.

ஒன்று படுவோம் தோழர்களே! விடுதலை பெறுவோம்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3315,lanka,8608,medical,7,Medicial,39,sports,346,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: எந்த இடர்காலத்திலும் முதலில் அதிகம் பாதிக்கப்படுவது உழைப்பாளர்களே. ..
எந்த இடர்காலத்திலும் முதலில் அதிகம் பாதிக்கப்படுவது உழைப்பாளர்களே. ..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiF_JGT-13BT9K50tlWFBM-r2ouGuCEZJab_MullB0iv1go9RIXK3VMXw20S1hsxV-UK1k1piP9YOFWjeTTkpShOJTTFEjsY50Q6Hab5R9lnzJJ4T7lj2IqfFBnlizL9rErJHhxaV6eBUQ/s640/%25E0%25AE%25AE%25E0%25AF%2581.%25E0%25AE%259A%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiF_JGT-13BT9K50tlWFBM-r2ouGuCEZJab_MullB0iv1go9RIXK3VMXw20S1hsxV-UK1k1piP9YOFWjeTTkpShOJTTFEjsY50Q6Hab5R9lnzJJ4T7lj2IqfFBnlizL9rErJHhxaV6eBUQ/s72-c/%25E0%25AE%25AE%25E0%25AF%2581.%25E0%25AE%259A%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/05/blog-post_42.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/05/blog-post_42.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content