கொரோனா ஊரடங்கு நாட்களில், மதுக்கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கும், நேற்று ரஜினிகாந்தும் அதுகுறித்த
ரஜினியை முந்திய கமல். |
கொரோனா ஊரடங்கு நாட்களில், மதுக்கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கும், நேற்று ரஜினிகாந்தும் அதுகுறித்து வெளியிட்ட டுவிட்டரும் அரசியல் வட்டாரங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்த பரபரப்புக்கிடையில் கமல்ஹாசன் சத்தமில்லாமல் ஒரு சாதனை செய்து ரஜினிகாந்தை ஓவர்டேக் செய்துவிட்டார். டுவிட்டரில் சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் கணக்கு ஆரம்பித்த போது அது சில பல புதிய சாதனைகளைப் படைத்தது என்றார்கள்.
ரஜினிகாந்த் 2013ம் ஆண்டு டுவிட்டருக்குள் வந்தார். அவர் வந்தபின் சுமார் மூன்று வருடங்கள் கழித்து தான் கமல்ஹாசன் டுவிட்டருக்குள் வந்தார். அதன்பின் ரஜினிகாந்த் பதிவிட்டதை விட கமல்ஹாசன் பதிவிட்டது தான் அதிகமாக இருக்கும்.
டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்கிறார் என கமல்ஹாசன் மீது அடிக்கடி அரசியல் விமர்சனங்கள் எழுந்தன. ரசிகர்களுக்கும் மக்களுக்கும் புரிகிறதோ இல்லையோ கமல்ஹாசன் அடிக்கடி கவிதை நடையில் டுவீட்டுகள் போடுவது வழக்கம்.
அப்படியிருந்தும் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் ரஜினிகாந்தை விட அதிகமாகியுள்ளது. ரஜினிகாந்திற்கு 57 லட்சம் பேரும், கமல்ஹாசனுக்கு 60 லட்சம் பேரும் தற்போது டுவிட்டரில் உள்ளார்கள். கடந்த வாரம் தான் கமல்ஹாசன் 60 லட்சத்தைக் கடந்தார்.
நடிகராகவும், அரசியல் கட்சித் தலைவராகவும் இருக்கும் கமல்ஹாசன் அடிக்கடி டுவீட்டுகள் போட்டாலும், தமிழ் நடிகர்களைப் பொறுத்தவரையில் தனுஷ் தான் 90 லட்சம் பேருடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.