இங்கிலாந்தில் உள்ள பிரபல பத்திரிகையான தி கார்டியனின் இணையத்தில் கேட்கபட்ட கேள்வியும் அதற்கான பதிலும் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய விடயமாக அமைந்...
இங்கிலாந்தில் உள்ள பிரபல பத்திரிகையான தி கார்டியனின் இணையத்தில் கேட்கபட்ட கேள்வியும் அதற்கான பதிலும் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய விடயமாக அமைந்துள்ளது.
குறிப்பாக நேற்று அதனுடைய இணையத்தில் கேள்வி பதில் போட்டி ஒன்றில் ஈழம் என்பதன் மறு பெயர் என்ன என்பதை கேட்டிருந்தது . அதற்குரிய பதிலாக இலங்கை காணப்பட்டாலும் கூட அதற்கு வழங்கப்பட்ட விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழீழ விடுதலைப்புலிகளை இணைத்து விளக்கம் வழங்கப்பட்டமையே சர்ச்சையானது.
இதனையடுத்து இங்கிலாந்துக்கான இலங்கை துதர் இது தவறான தகவல் என்பதை சுட்டி காட்டி தி கார்டியன் பத்திரிகைக்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து விளக்கத்தை ஏற்று அக்கேள்வியை தமது இணையத்தில் இருந்து நீக்கியுள்ளது.