புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் உடைமைகள் மீட்பு.
புதுக்குடியிருப்பு, கைவேலிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது விடுதலைப்புலிகளின் நான்கு சீருடைகளும் அவற்றுக்கான தொப்பிகளுடன் பெண்போராளிகள் பயன்படுத்தும் இடுப்பு பட்டி மற்றும் சிவில் உடைகள் சிலவற்றுடன் ஒளிப்பட நாடா கெசட், ஒலி நாடா கெசட் ஒன்று, நான்கு அல்பங்கள் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் ஆவணங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
போர் நடைபெற்ற காலத்தின்போது விடுதலைப்புலிகளால் இவை புதைக்கப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
பொலிசாரால் மீட்கப்பட்ட அனைத்து பொருட்களும் இன்று (12) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.