யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் அனுசரணையுடன் மணியம்தோட்டம் சமூக மேம்பாட்டு சுய முயற்சி குழு நடாத்தும் சுயதொழில் கண்காட்சியும் விற்பனையும் கரி...
யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் அனுசரணையுடன் மணியம்தோட்டம் சமூக மேம்பாட்டு சுய முயற்சி குழு நடாத்தும் சுயதொழில் கண்காட்சியும் விற்பனையும் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் இயக்குனர் யூசின் பிரான்சிஸ் பாதிரியாரினால் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ் மணியம் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள இயூயின் கல்வி நிலையத்தில் இக் கண்காட்சி இடம்பெற்றுவருவதுடன் இவ் ஆரம்ப நிகழ்வில் அந்த ஊர் பொதுமக்கள்,கிராமசேவையாளர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலர் கலந்துகொண்டனர்.