உலகளவில் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சினிமா துறையின...
உலகளவில் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
சினிமா துறையின் உச்சபட்ட விருதான ஒஸ்காரை பெறுவதில் உலகின் பல்வேறு சினிமா பிரபலங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், 93 ஆவது ஒஸ்கார் நிகழ்ச்சிகள் அடுத்த ஆண்டு (2021) பெப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுவதாக இருந்ததது.
இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற இருந்த ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஒஸ்கார் வரலாற்றிலேயே நிகழ்ச்சிக்கான தேதிகள் மாற்றியமைக்கப்பட்டது இது நான்காவது முறையாகும்.
இதற்கு முன்னதாக 1938 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்சில் ஏற்பட்ட வெள்ளம், 1968 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்டது, 1981 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரோனல்டு ரீகன் கொல்லப்பட்டது ஆகிய மூன்று
காரணங்களுக்காக மட்டுமே ஒஸ்கார் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.